7 எம்எல்ஏக்களுக்கு திமுக "கல்தா
சென்னை:
கடந்த தேர்தலில் திமுக சார்ப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 7 எம்எல்ஏகளுக்குஇந்த முறை சீட் வழங்கப்படவில்லை.
திமுகவின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 129 தொகுதிகளில்அக்கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடுகிறது.கடந்த சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களானதிருவல்லிக்கேணி உசேன், தாம்பரம் வைத்தியலிங்கம், கடலூர் புகழேந்தி, திருச்சி-1பரணிக்குமார், திருவாரூர் அசோகன், பளையம்கோட்டை மைதீன்கான், சிதம்பரம்சரவணன் ஆகியே 7 பேருக்கு இந்த தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை.
இதில் பாளையம்கோட்டை தொகுதி தமிழ் மாநில இந்திய தேசிய முஸ்லீம் லீக்கட்சிக்கும், சிதம்பரம் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மற்றபடி பெரும்பாலான மூத்த தலைவர்களுக்கு மீண்டும் சீட் தரப்பட்டுள்ளது. பலவிஐபி வேட்பாளர்கள் தொகுதி மாறி போட்டியிடுகின்றனர்.
வீரபாண்டி ஆறுமுகம் சேலம்-2 தொகுதியில் போட்டியிடுகிறார்.
வழக்கமாக இவர் வீரபாண்டி தொகுதியில் போட்டியிடுவார்.
அதேபோல கடந்த முறை வில்லிவாக்கம் தொகுதியில் வென்ற நடிகர் நெப்போலியன்,இம்முறை மயிலாப்பூருக்கு மாறியுள்ளார். இங்கு அவர் அதிமுக வேட்பாளரானநாடக-காமெடி நடிகர் எஸ்.வி.சேகரை எதிர்க்கறார் நெப்போலியன்.
கடந்த முறையே சீட் கேட்டு கிடைக்காமல் போனதால் ஏமாற்றத்தில் இருந்தஎழுத்தாளர் பெண் சல்மாவுக்கு இந்த முறை மருங்காபுரி தொகுதிகொடுக்கப்பட்டுள்ளது.
அவருக்காக கருணாநிதியிடம் கனிமொழி பரிந்துரை செய்ததாகக் கூறப்படுகிறது.
திமுக வேட்பாளர்களில் 77 பேர் பட்டதாரிகள். அவர்களில் பெரும்பாலானவர்கள்வழக்கறிஞர்கள். நான்கு முஸ்லீம் வேட்பாளர்களும் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
கருணாநிதி மீண்டும் சேப்பாக்கத்திலும், அன்பழகன் மீண்டும் துறைமுகத்திலும்,ஆற்காடு வீராசாமி மீண்டும் அண்ணா நகரிலும், ஸ்டாலின் ஆயிரம் விளக்குதொகுதியிலும் களம் காணுகின்றனர்.
முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மதுரை மத்திய தொகுதியில்நிறுத்தப்பட்டுள்ளார். அதேசமயம், மதுரை மாநகராட்சி மேயரும் தற்போதையதிருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வுமான செ.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம் ஆகியோருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.
இதில் லாரிகள்- செங்கல் சூளைகள் நடத்தி வரும் மேயர் செ.ராமச்சந்திரன் குஜால்விஷயங்களுக்குப் பெயர் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவைச் சேர்ந்த பெண் கவுன்சிலரோடு இவர் காரில் ஊர் சுற்றியபோது அந்தக் கார் விபத்துக்குள்ளாகி அந்தகவுன்சிலர் பலியானது நினைவுகூறத்தக்கது. கட்டிய கைலியோடு காரைவிட்டு எஸ்கேப் ஆகி திமுகவின்மானத்தை மொத்தமாக வாங்கினார் ராமு.
அதே நேரத்தில் கருணாநிதியின் முரட்டு பக்தர் என திமுகவினரால் கூறப்படும்தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியசாமியின் மகள் கீதா ஜீவனுக்கு சீட்தரப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் மகள்பூங்கோதைக்கும் சீட் கிடைத்துள்ளது.
அதேசமயம், மதுரையில் கொல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணனின்வாரிசுகள் யாருக்கும் சீட் கொடுக்கப்படவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications