For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 தொகுதி காங். வேட்பாளர்கள் மாற்றம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தொட்டியம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்கள் திடீரெனமாற்றப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்துசில தொகுதி வேட்பாளர்களுக்கு கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.ஆத்தூர், தொட்டியம், ஸ்ரீவைகுண்டம், சோளிங்கர், வேலூர் உள்ளிட்ட பல்வேறுதொகுதிகளின் வேட்பாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.

இந் நிலையில், தொட்டியம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளர்களை காங்கிரஸ்மேலிடம் மாற்றியுள்ளது.

தொட்டியம் தொகுதியின் புதிய வேட்பாளராக ராஜசேகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.அதேபோல ஸ்ரீவைகுண்டம் தொகுதி புதிய வேட்பாளராக ஊர்வசி செல்வராஜ்அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர் உண்ணாவிரதம்:

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் என்ற அத்தாட்சிக் கடிதத்தைக் கொடுக்ககட்சித் தலைமை தாமதம் செய்ததாலும், தன்னை மாற்றி விட்டு வேறு வேட்பாளரைபோட முயற்சி நடப்பதாக தகவல் வெளியானதாலும் கோபமடைந்த முன்னாள்எம்.பி. அன்பரசுவின் மகனும், சோளிங்கர் தொகுதி வேட்பாளருமான அருள் அன்பரசுசத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடத்தினார்.

காங்கிரஸ் கட்சியின் பல்வேறு கோஷ்டிகளில் அன்பரசு கோஷ்டியும் ஒன்று. அந்தக்கோஷ்டியின் பலத்துக்கு ஏற்ப ஒரே ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்கியது கட்சித்தலைமை.

அது சோளிங்கர் தொகுதி. அதில் தனது மகன் அருளை நிறுத்தியிருக்கிறார் அன்பரசு.

இதில் சோளிங்கர் தொகுதியில் பிற கோஷ்டிகள் அருளுக்கு எதிராக போர்க் கொடிதூக்கியுள்ளன. இந் நிலையில், அருள் மீது மார்வாடி பிலிம் பைனான்சியர் ஒருவர்பண மோசடிப் புகார் கூறினார்.

இதன் பின்னணியில் கூட வேறு கோஷ்டிகள் இருப்பதாகவே அருள் கூறுகிறார். இந்தமோசடி புகாரை வைத்து அருளை மாற்றிவிட்டு தொகுதியை தனது ஆதரவாளருக்குத்திருப்பிவிட வாசன் தரப்பு முயல்வதாகத் தெரிகிறது.

இதை அறிந்த அருள் தனது ஆதரவாளர்களுடன் சத்தியமூர்த்தி பவனுக்கு விரைந்தார்.அங்கு வியாழக்கிழமை இரவு முதல் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார்.வெள்ளிக்கிழமை அதிகாலை வரை அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார்.

தகவல் அறிந்ததும் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அங்கு விரைந்து வந்து அருளைசமாதானப்படுத்தி உண்ணாவிரதத்தைக் கைவிடச் செய்தார்.

போராட்டம் குறித்து அருள் கூறுகையில், சில தவறான புகார்களின் அடிப்படையில்என்னை சோளிங்கர் தொகுதியிலிருந்து மாற்ற சிலர் முயற்சிக்கிறார்கள். ஏராளமானபணம் செலவு செய்து தொகுதி முழுக்க சுவர் விளம்பரம் செய்து வைத்துள்ளேன்.

அதை எல்லாம் சிலர் அழித்து அவர்களது பெயரை எழுதி வருகின்றனர். நான் தான்காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்பதற்கான அத்தாட்சி கடிதத்தைதர கட்சிமேலிடம் தாமதம் செய்து வருகிறது.

இதன் காரணமாகததான் நான் உண்ணாவிரதம் இருந்தேன் என்றார் அருள்.

தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்ட அருள் நேற்றிரவு இரவு,மேலிடப் பார்வையாளர் சாந்தராம் நாயக் தங்கியிருந்த அறைக்கு முன் போராட்டத்தில்குதித்தார்.

என்னை மாற்றக் கூடாது, சின்னம் தொடர்பான கட்சியின் அத்தாட்சிக் கடிதத்தைஉடனடியாக வழங்க வேண்டும் என்று அவர் கோரினார். இதையடுத்து அருளைசமாதானப்படுத்திய நாயக், ஆவண செய்வதாக உறுதியளித்தார்.

ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், தொட்டியம் தொகுதிகளிலும் வேட்பாளர்களுக்கு வேறுகோஷ்டிகளிடம் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளதைக் காரணமாக வைத்து அவர்களைமாற்ற சில காங்கிரஸ் தலைகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது என்று நாம் முன்பேகூறியது நினைவிருக்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X