பஸ் கட்டணம் உயராது: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி தமிழகத்தில் பேருந்துக் கட்டணம்உயர்த்தப்பட மாட்டாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பெட்ரோல், டீசல் விலைஉயர்வைக் காரணமாக தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது.டீசல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைக்க வேண்டும் என சோனியா காந்தி,மத்திய அரசைக் கேட்டுக் கொண்டேன். அதனை ஏற்று டீசல் விலை குறையும் எனசெய்திகள் வருகின்றன.
அப்படி விலை குறைக்கப்பட்டால் மகிழ்ச்சிதான் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications