கஞ்சா கடத்தல் வழக்கு: ஜனனி விடுதலை!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து மதுரை இளம்பெண் ஜனனி,அவரது தாயார் ரமீஜா, ஓட்டுனர் சதீஷ் ஆகியோரை விடுதலை செய்து மதுரைபோதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மதுரை அன்பு நகரைச் சேர்ந்த ஜனனி, சசிகலாவின் கணவர் நடராஜனுக்குநெருக்கமானார். நடராஜன் அவருக்கு வேண்டிய எல்லாவற்றையும் வழங்கினார்.

Janani

இந் நிலையில் ஜனனி, அவரது தாயார் ரமீஜா, கார் ஓட்டுனர் சதீஷ் ஆகியோர கடந்த2003ம் ஆண்டு ஜுலை மாதம் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

3 பேரும் காரில் கஞ்சா கடத்தியதாக அவர்கள் மீது மதுரை போதைப் பொருள்கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஜனனியின் சென்னை மற்றும் மதுரை வீடுகளில் போலீஸார் சோதனை நடத்தினர்.அதில் 30 கிலோ கஞ்சா சிக்கியதாக போலீசார் கூறினர்.

மேலும் ரூ.1.40 கோடி பணம், 21 பவுன் தங்க நகைகள், ஒரு கார் ஆகியவற்றைபோலீஸார் பறிமுதல் செய்தனர்.

கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

3 பேர் மீதான புகாரையும் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறி விட்டதாக கூறிய நீதிபதிமாணிக்கம், சந்தேகத்தின் பலனின் அடிப்படையில் 3 பேரையும் விடுதலைசெய்வதாக தீர்ப்பளித்தார்.

மேலும், ஜனனியின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ரூ. 1.40 கோடி பணத்தைதங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற வருமான வரித்துறையின்கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்தார்.

இந்தப் பணம், ஜனனி கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில், ஜெகதீஷ் ராஜாஎன்ற ஜமீன்தாருக்குச் சொந்தமானது. எனவே ராஜா மீது வருமான வரித்துறைதனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்ந்து விளக்கம் கேட்கலாம் என்று நீதிபதி தனதுஉத்தரவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் கடந்த 2003ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதிகுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 16 சாட்சிகள்விசாரிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது பல அரசுத் தரப்பு சாட்சிகள் பல்டி அடித்ததுநினைவிருக்கலாம். இந்த தீர்ப்பின் மூலம் தமிழகத்தை மட்டுமல்லாது இந்தியாவையேபெரும் பரபரப்புக்குள்ளாக்கிய ஒரு வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+