டிடிஎச் ஒளிபரப்பை தொடங்கும் சன் டிவி
சென்னை:
டாடா, ஸ்டார் டிவி, குழுமம், ஜீ டிவி குழுமங்களுக்குப் போட்டியாக சன் டிவி நிறுவனமும் டிடிஎச்(டைரக்ட்-டூ-ஹோம்) ஒளிபரப்பை தொடங்குகிறது.
சிறிய டிஷ் ஆன்டனா, செட்டாப் பாக்ஸ் ஆகியவை இருந்தால் கேபிள் டிவி இணைப்பு இல்லாமலேயே இந்தஒளிபரப்பை பார்க்க முடியும். இதை வாங்க ரூ. 3,000 வரை செலவாகும். கேபிள் டிவி வசதி இல்லாதபகுதிகளுக்கும், சாதாரண ஒளிபரப்பு சென்றடைய முடியாத பகுதிகளுக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக்காண டிடிஎச் தொழில்நுட்பம் உதவும்.தனியாக டிடிஎச் ஒளிபரப்பை தொடங்குவதையெட்டி இதுவரை தூர்தர்ஷனின் டிடிஎச் தொகுப்பில் இருந்த சன்டிவி விலகிக் கொண்டுவிட்டது.
தூர்தர்ஷனில் இப்போது அந்த இடத்தை ஜெயா டிவிக்கு வழங்கியுள்ளது. இதனால் தூர்தர்ஷனின் டைரக்ட்பிளஸ் ஒளிபரப்பில் ஜெயா டிவியும் இடம் பிடித்துள்ளது.
இதன் மூலம் ஜெயா டிவி ஒளிபரப்பை இந்தியா முழுவதும் கேபிள் இணைப்பு இல்லாமலே பார்க்க முடியும்.
தனியார் டிடிஎச் ஒளிபரப்பு நிறுவனங்களிடம் இணைப்பைப் பெற்றால் கட்டணச் சேனல்களைப் பார்க்கமாதந்தோறும் பணம் செலுத்த வேண்டும். ஆனால், தூர்தர்ஷனின் டிடிஎச் ஒளிபரப்பு இலவசம் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இதில் தூர்தர்ஷன் செய்திகள் தவிர 32 சேனல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த தொகுப்பில் தூர்தர்ஷனின்பொதிகை, சன் டிவி ஆகிய தமிழ்ச் சேனல்களும் இடம் பெற்றிருந்தன. இப்போது சன் டிவியின் இடம் ஜெயாடிவிக்கு தரப்பட்டுள்ளது.
சன் டிவி குழுமம் தனது டிடிஎச் ஒளிபரப்பை அக்டோபர் மாத இறுதியில் தொடங்கும் என்று தெரிகிறது.
முக்கிய தமிழ் சேனல்கள் மற்றும் பிற மொழிகளில் தமிழக மக்கள் அதிகம் பார்க்கும் சேனல்கள் அகியவை சன்குழும டிடிஎச் தொகுப்பில் இடம் பெறும் என்று தெரிகிறது.
சன் டிவி தவிர ஸ்டார் ஸ்கை என்ற நிறுவனமும் விரைவில் டிடிஎச் ஒளிபரப்பைத் தொடங்கவுள்ளது. இது டாடாமற்றும் ஸ்டார் டிவி நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும்.
இந்த டிடிஎச் விவகாரத்தில் தான் டாடாவை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மிரட்டினார் என தேர்தல் நேரத்தில்வைகோ குண்டைப் போட்டு அது புஸ் ஆகிப் போனது நினைவுகூறத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications