அமெரிக்காவை ஆக்கிரமிக்கும் வெளிநாட்டவர்கள்
வாஷிங்டன்:
அமெரிக்க மக்கள் தொகையில், 12.4 சதவீதம் பேர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள்என அங்கு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி,அமெரிக்க மக்கள் தொகையில், 12.4 சதவீதம் பேர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள்ஆவர். அதாவது கிட்டத்தட்ட 3.6 கோடி அமெரிக்கர்கள், வெளிநாடுகளைபூர்வீகமாகக் கொண்டவர்கள்.
நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய நகரங்களில் வசிக்கும் 3 பேரில் ஒருவர் பிறப்பால்அமெரிக்கர் அல்லாதவர் ஆவர். அமெரிக்காவின் தென் கிழக்கு மாகாணங்களில்தான்வெளிநாட்டிரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக கணக்கெடுப்பில்தெரிய வந்துள்ளது.
கடந்த 2000-05ம் ஆண்டில் அமெரிக்காவில் புதிதாக 50 லட்சம் பேர்குடியேறியுள்ளனர். இவர்களில் 58 சதவீதம் பேர் கலிபோர்னியா, புளோரிடா,டெக்ஸாஸ், நியூயார்க், நயூ ஜெர்ஸி, இல்லினாய்ஸ் ஆகிய மாநிலங்களில்குடியேறியுள்ளனர்.
கலிபோர்னியாவில் மட்டும் 21 சதவீதம் பேர் குடியேறியுள்ளனர். கடந்த1980களிலும், 90களிலும் இந்த 6 மாநிலங்களிலும் வெளிநாடுகளைச் சேர்ந்தஅமெரிக்கர்கள் அதிக அளவில் குடியேறினர். ஆனால் அந்த அளவு தற்போதுகுறையத்தொடங்கியுள்ளது.
கடந்த 2000-05ம் ஆண்டு காலத்தில் தெற்கு கரோலினா, அலபாமா, மிஸிஸிப்பி,ஆர்கன்சாஸ், டென்னஸ்ஸி, கென்டகி, நெப்ரஸ்கா, நியூ ஹாம்ப்ஷயர் ஆகியமாநிலங்களில் அதிக அளவிலான வெளிநாட்டினர் குடியேறியுள்ளனர். கிட்டத்தட்ட32 சதவீதம் பேர் இங்கு குடியேறியுள்ளனர்.
பொருளாதாரம், வேலை வாய்ப்பு ஆகியவைதான் அதிக அளவிலானவெளிநாட்டவர்களை அமெரிக்காவுக்கு ஈர்க்கிறது. 90களில் அமெரிக்காவுக்குவருவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது.
ஆனால் போகப் போக இது குறைந்து விட்டது என்கிறார் ஃப்யூ நகரின் ஆய்வு மையஉதவி இயக்குனர் ராகேஷ் கோச்சார்.
செப்டம்பர் 11 தீவிரவாதத் தாக்குதலும் அதைத் தொடர்ந்து அமெரிக்கா கொண்டுவந்த குடியேற்ற கட்டுப்பாடுகளுமே இந்த வருகை குறைவுக்கு முக்கிய காரணமாகக்கருதப்படுகிறது.
2003, 2004ல் அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களின் எண்ணிக்கைகணிசமாகக் குறைந்தது. ஆனால் தற்போது மீண்டும் வேகம் பிடிக்கஆரம்பித்துள்ளதாம்.
தென் கிழக்கு மாகாணங்களில் அதிக அளவிலான வெளிநாட்டவர் குடியேறுவதற்கு,அங்கு கட்டுமானம், உற்பத்தி, உணவு பதப்படுத்துதல் ஆகிய தொழில்களில்ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளதே முக்கிய காரணம் என்கிறார் கோச்சார்.
அமெரிக்காவில்குடியேறும் வெளிநாட்டவர்களில் முதலிடத்தைப் பிடிப்பவர்கள்லத்தீன் அமெரிக்க நாடுகளைச்சேர்ந்தவர்கள். இவர்களில் மெக்ஸிகோ நாட்டைச்சேர்ந்தவர்கள்தான் மிக அதிகம்.
அதற்கு அடுத்து ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில்அமெரிக்காவில் குடியேறுகிறார்கள்.
ஆசியர்களில் சீனா, இந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான் அதிகஅளவில் குடியேறி வருகின்றனர்.
உலக அளவில் வெளிநாட்டவர்கள் அதிகம் குடியேறும் நாடாகவும் அமெரிக்காதான்உள்ளது. சொந்த நாடுகளை விடடு வேறு நாடுகளுக்கு இடம் பெயர்வோரில் 20சதவீதம் பேர் அமெரிக்காவில் குடியேறுகிறார்கள்.
ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் இதற்கு அடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications