தீவிரவாதம: ஆஸ்திரேலிய முஸ்லீம்களுக்கு ஹாவர்ட் அட்வைஸ்
கேன்பெர்ரா:
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் முஸ்லீம்கள் தீவிரவாதத்தை மேலும் தீவிரமாக கண்டிக்க முன் வர வேண்டும் எனஅந் நாட்டு பிரதமர் ஜான் ஹாவர்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதலை முன்னிட்டு அவர் நிகழ்ச்சியொன்றில் பேசிய ஜான் ஹாவர்ட்,ஆஸ்திரேலியாவில் உள்ள முஸ்லீம்களில் ஒரு பிரிவினர் சமூகத்துடன் முழுமையாக இணையாமல் உள்ளனர்.இதனால் மதவாதத்தை ஆதரிக்கும் அபாயத்தில் அவர்கள் உள்ளனர்.ஆனால், பெரும்பாலான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை கண்டிக்கின்றனர். மிகச் சிலர் தான் தீவிரவாதத்தைவன்மையாக கண்டிக்க மறுக்கின்றனர் என்றார்.
ஆனால், ஹாவர்டின் பேச்சு சமூகத்தில் பிரிவினையை தூண்டும் வகையில் இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள்கூறியுள்ளன. தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டித்து வரும் ஆஸ்திரேலிய இஸ்லாமிக் கவுன்சில்பெரடேசன், ஜான் ஹாவர்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிக் பிரண்ட்ஷிப் அசோசியேசன் தலைவர் கேசர் டிராட் கூறுகையில்,
ஹாவர்டின் பேச்சு சமூகத்தில் பிரிவினயை தூண்டும் வகையில் உள்ளது. சமீபகாலமாக அவரது இதுபோன்றபேச்சுக்கள் காரணமாக ஆஸ்திரேலியாவில் முஸ்லீம்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.
முஸ்லீம்களை மட்டும் குறிப்பிட்டு குறை சொல்லாமல், அனைவரும் சேர்ந்து வசிக்கும் வகையில் சூழ்நிலையைஉருவாக்கும் வேலையை ஹாவர்ட் செய்ய வேண்டும் என்றார்.
ஆஸ்திரேலியாவில் சுமார் 2.8 லட்சம் முஸ்லீம்கள் உள்ளனர். நாட்டின் மக்கள் தொகையில் இது 1.5சதவீதமாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications