டி.வி. இல்லாட்டி ரேடியோ: தேமுதிக வியூகம்!
சென்னை:
திமுகவும், அதிமுகவும் தங்களது தொலைக்காட்சிகளில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விளம்பரங்களில் தூள்கிளப்பி வரும் நிலையில் விஜயகாந்த்தின் தேமுதிக, எஃப்.எம். ரேடியோக்களில் விளம்பரம் செய்து அசத்திவருகிறது.
திமுகவுக்கு சன் டிவி, அதிமுகவுக்கு ஜெயா டிவி இரண்டு முக்கிய கட்சிகளும் ஆளுக்கொரு டிவியைவைத்துள்ளன. இப்போது பாமகவுக்கு மக்கள் டிவி வந்து விட்டது. விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஆதரவாகதமிழன் டிவி உள்ளது.இப்படி ஒவ்வொரு கட்சியும் ஒரு டிவியை வைத்துள்ளதால், கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது தேமுதிகதான்.இந்தக் கட்சியின் தேர்தல் விளம்பரத்தை ஒளிபரப்ப ஒரு டிவியும் கிடைக்கவில்லை. முன்பு ராஜ் டிவியிலும்,விஜய் டிவியிலும் விளம்பரம் கொடுத்து வந்தார் விஜயகாந்த்.
இந்த முறை டிவியை விட்டு விட்டு ரேடியோவுக்குத் தாவி விட்டார். சென்னையிலிருந்து ஒலிபரப்பாகும்ரேடியோ மிர்ச்சி, பிக் எஃப்.எம், ஹலோ எஃப்.எம். ஆகிய ரேடியோக்களில் தேமுதிகவின் விளம்பரங்கள் கலக்கிவருகின்றன.
தீபம் சீன்னத்தைப் பிரபலப்படுத்தும் வகையில் இந்த விளம்பரங்களை தொடர்ந்து ஒலிபரப்பு செய்து வருகிறதுதேமுதிக. அதேபோல கொடைக்கானலில் உள்ள வானவில் எஃப்.எம். வானொலியிலும் தேமுதிக பிரசாரம்செய்து வந்தது. ஆனால், மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலை காரணம் காட்டி அதற்கு தடை விதித்ததுதேர்தல் ஆணையம்.
இதனால் கடுப்பாகியுள்ளது தேமுதிக. ஜெயா டிவியிலும், சன் டிவியிலும் தொடர்ந்து தேர்தல் தொடர்பானவிளம்பரங்கள் ஒளிபரப்பாகிறது. இந்த இரு டிவிகளும் மதுரை மத்திய தொகுதியில் தெரியவில்லையா என்றுஅவர்கள் ஆவேசமாக கேட்கின்றனர்.
எப்படியோ, உங்களுக்கு டிவின்னா, எங்களுக்கு ரேடியோ என்ற ரீதியில் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில்கலக்கி வருகிறது தேமுதிக.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications