• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடிகை ஸ்ரீவித்யா காலமானார்-உடல் தகனம்

By Staff
|

Srividhyaதிருவனந்தபுரம்:புற்று நோயால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகைஸ்ரீவித்யா, மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் இன்று பிற்பகல் திருவனந்தபுரத்தில் அரசுமரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் எம்.எல்.வசந்தகுமாரி, விகடம் கிருஷ்ணமூர்த்தி தம்பதியின் மகள் ஸ்ரீவித்யா.தாயைப் போலவே நல்ல குரல் வளம் கொண்டவரான ஸ்ரீவித்யா நடனத்திலும் சிறந்து விளங்கினார்.

தனது 13வது வயதில் நடிப்புக் களத்தில் இறங்கினார் ஸ்ரீவித்யா. சிவாஜி கணேசன் நடித்த திருவருட்செல்வர்படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து நிறையப் படங்களில் நடிக்கஆரம்பித்தார் ஸ்ரீவித்யா.

சிவாஜி, ரஜினி, கமல், ஜெய்சங்கர், விஜயக்குமார் உள்ளிட்ட அப்போதைய முன்னணி ஹீரோக்களுடன்ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ரீவித்யா. ரஜினியின் முதல் ஹீரோயின் ஸ்ரீவித்யா என்பது குறிப்பிடத்தக்கது. அபூர்வராகங்கள் படத்தில் ரஜினியின் மனைவியாக ஸ்ரீவித்யா வருவார்.

Srividhya with Georgeதமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 900க்கும் மேற்பட்டபடங்களில் நடித்துள்ளார் ஸ்ரீவித்யா. இதில் அவரது தாய் மொழியான மலையாளத்தில் மட்டும் 200 படங்களில்நடித்துள்ளார்.

ஸ்ரீவித்யா நடித்ததில் புகழ் பெற்றவை: அபூர்வ ராகங்கள், சொல்லத்தான் நினைக்கிறேன், இமயம், புன்னகைமன்னன், அபூர்வ சகோதரர்கள், தளபதி, காதலுக்கு மரியாதை, நம்மவர் என பல படங்கள்.

கணவர் ஜார்ஜிடம் இருந்து விவாகரத்து பெற்ற ஸ்ரீவித்யா சில காலத்திற்கு முன் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். சென்னையிலிருந்து கேரளாவுக்கு இடம் பெயர்ந்தார். அங்கு டிவி தொடர் ஒன்றில் நடித்து வந்தார்.ஆனால் திடீரென அதிலிருந்து விலகிக் கொண்டார். அதன் பிறகு அவர் குறித்த எந்தத் தகவலும்வெளியாகவில்லை.

இந் நிலையில் ஸ்ரீவித்யாவுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் அவர் திருவனந்தபுரத்தில்உள்ள அம்ரிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து தமிழ்மற்றும் மலையாளத் திரையுலகினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவித்யாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கமல்ஹாசன் சமீபத்தில் திருவனந்தபுரம் சென்றுஸ்ரீவித்யாவை சந்தித்து கண்கலங்க பேசி விட்டு வந்தார். நோய் முற்றிய நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், நேற்று ஸ்ரீவித்யாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மரணமடைந்தார்.

ஸ்ரீவித்யாவுக்கு வயது 53. மலையாள திரைப்பட தயாரிப்பாளர் ஜார்ஜை காதலித்து திருமணம் செய்தார். ஆனால்அந்த திருமண வாழ்க்கை நீண்ட காலம் நிலைக்கவில்லை. இருவரும் விவாகரத்து செய்தனர். அதன் பின்னர்தனியாக வசித்து வந்தார் ஸ்ரீவித்யா.

ஸ்ரீவித்யா மறைவுக்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது உடல் திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கட்டிருந்தது. ஏராளமானதிரையுலகினரும், அரசியல் தலைவர்களும், பொது மக்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கமல் இரங்கல்:

ஸ்ரீவித்யாவின் மரணத்திற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்வெளியிட்டுள்ள செய்தியில், ஸ்ரீவித்யாவின் மரணம் நான் மட்டுமல்ல, அவரும் எதிர்பார்த்ததுதான். கடந்த ஒருவருடமாக அமைதியாக, கண்ணியம் சற்றும் குறையாமல், கலங்காமல் மரணத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தார் என் தோழி ஸ்ரீவித்யா.

கடந்த ஒரு வருடமாக அவரை வாழ வைத்துக் கொண்டிருந்தது விஞ்ஞானம், வீரம்தான். ஒப்பற்ற ஒரு சகநடிகையை மட்டும் அல்லாமல், நல்ல தோழியையும் இழந்து விட்டேன்.

வித்யா பற்றி நினைக்கும்போது கவிஞர் கண்ணதாசனின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. பொண்ணுக்குத் தங்கமனசு, அவள் கண்ணுக்கு நூறு வயசு.

தொடர்ந்து அவரது திறமையை நாம் காணும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஊடகங்களுக்கு நன்றி என்றுகூறியுள்ளார் கமல்.

உடல் தகனம்:

இன்று பிற்பகல் சுரமனை சுடுகாட்டில் முழு அரசு மரியாதையுடன் ஸ்ரீவித்யா உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்குசகோதரர் தீ மூட்டினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X