வீடியோ கான்பரன்சிங் மூலம் பாஸ்போர்ட்
கோவை:கோவை பாஸ்போர்ட் அலுவலக்தில் வீடியோ கான்பரன்சிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கிளை அலுவலகம் கோவையில் உள்ளது. மேற்கு மண்டலமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட்டுகளை இங்கேயே விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்.
தற்போது பாஸ்போர்ட்டுகளை விரைவாகப் பெற சென்னை அலுவலகத்திற்கும், கோவை அலுவலகத்திற்கும்இடையே வீடியோ கான்பரன்சிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் நீரஜ்மித்தல் கலந்து கொண்டு வீடியோ கான்பரன்சிங் வசதியை தொடங்கிவைத்தார். கோவையில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு, இன்னும் பாஸ்போர்ட் கிடைக்காதுதொடர்பான கேள்விகளுக்கு சென்னை பாஸ்போர்ட்ல் மண்டல அதிகாரி சுமதி வீடியோ கான்பரன்சிங் மூலம்விளக்கம் அளித்தார்.
அப்போது ஆட்சித் தலைவர் நீரஜ் மிட்டல், 4 விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட்டுகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்பதைக் கேட்டார். அதற்கு சுமதி, விரைவில் அந்த 4 பேருக்கும் பாஸ்போர்ட் வந்து சேரும்என்று தெரிவித்தார்.
நீரஜ் மிட்டல் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை பாஸ்போர்ட் அலுவலத்திலும், சென்னைபாஸ்போர்ட் அலுவலக்திலும் வீடியோ கான்பரன்சிங் முறையில் பாஸ்போர்ட் கிடைப்பதில் உள்ள தாமதத்தையும்,பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் குறித்த சந்தேகத்தையும் கேட்ட தெரிந்து கொள்ள இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
கோவை பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வந்துள்ள விண்ணப்பங்களின் நிலுவைக்கு போலீஸ் விசாரணை ஒருமுக்கிய காரணமாக இருக்கிறது. பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் தொடர்பாக நடத்தப்படும் போலீஸ்விசாரணையை விரைவில் முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முதலில் வாரம் ஒருமுறை இந்த வசதி பயன்படுத்தப்படும். அதன் பின்னர் இது விரிவுபடுத்தப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications