அவசர அரசு மருத்துவ சேவைக்கு 1056
சென்னை:தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளை தொடர்பு கொண்டு பேச 1056 என்ற எண் கொண்டகட்டணமில்லா தொலைபேசி வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏழை, எளிய மக்களின் நலன் கருதி அரசுபொது மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்பசுகாதார மையங்கள், மாவட்டச் சுகாதார அலுவலகங்கள் ஆகியவற்றுடன் தகவல் தொடர்புகளால் இணைந்த,மருத்துவக் கட்டுப்பாட்டு அவசர சேவை மையங்கள் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்கள் மூலமாக கர்ப்பணிகள், விபத்தில் சிக்கியவர்கள், பிற சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள்ஆகியோருக்கான முதலுதவி மருந்துகளையும், பிற மருத்துவ சாதனங்களையும் கொண்ட ஆம்புலன்ஸ் வாகனவசதி, ரத்தம் வழங்கும் தகவல், தேவைப்படும் சிகிச்சைக்கு ஏற்பட உடனடியாகச் செல்ல வேண்டியமருத்துவமனை பற்றிய தகவல்கள் ஆகியவை பொதுமக்களுக்கு உடனுக்குடன் அளிக்கப்படவுள்ளது.
இந்த மையங்களை பொதுமக்கள் உடனடியாகத் தொடர்பு கொள்வதற்கு வசதியாக, போலீஸ், தீயணைப்புத்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போல 3 அல்லது நான்கு இலக்க இலவச தொலைபேசி எண் ஒன்றைஒதுக்குமாறு மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இக்கோரிக்கையை ஏற்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் , புதிதாக நிறுவப்படவுள்ள இந்தசேவை மையங்களுக்கு 1056 என்ற இலவச நான்கு இலக்க எண்ணை ஒதுக்கியுள்ளார் என்று அந்தசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications