9வது டபுள் செஞ்சுரி போட்ட லாரா!
முல்தான்:பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத்தீவுகள் அணியின் கேப்டன் பிரையன் லாரா இரட்டை சதம் அடித்தார். இது அவருக்கு9வது இரட்டை சதம் ஆகும்.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கும்,பாகிஸ்தானுக்கும் இடையிலான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி முல்தான் நகரில்நடந்து வருகிறது.
பேட்டிங்குக்கு சாதகமான முல்தானில், இரு அணிகளும் ரன் குவிப்பில்ஈடுபட்டுள்ளன. முதல் இன்னிங்ஸில் 357 ரன்களை பாகிஸ்தான் சேர்த்தது. பின்னர்ஆடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 591 ரன்களைக் குவித்தது.
இதில் லாரா போட்ட அபார இரட்டை சதம் அடங்கும். அதிரடியாக ஆடிய லாரா 216ரன்களைக் குவித்தார். 262 பந்துகளில் இந்த இரட்டை சதத்தை லாரா எடுத்தார். இதுஅவருக்கு 9வது இரட்டை சதமாகும்.
அதிக அளவில் இரட்டை சதம் அடித்த வீரராக ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மன்முதலிடத்தில் உள்ளார். அவர் மொத்தம் 12 இரட்டை சதங்களை டெஸ்ட்போட்டிகளில் எடுத்துள்ளார். 2வது இடத்தில் லாரா உள்ளார்.
இரட்டை சதங்களை எடுத்துள்ள பிற வீரர்கள்: இங்கிலாந்தின் வால்டர் (7),இலங்கையின் அட்டப்பட்டு (6), பாகிஸ்தானின் மியான்டட் (6), இந்தியாவின் ராகுல்டிராவிட் (5), இலங்கையின் சங்கக்காரா, பாகிஸ்தானின் முகம்மது யூசுப், ஜாகிர்அப்பாஸ், இங்கிலாந்தின் ஹட்டன் ஆகியோர் தலா 4 இரட்டை சதங்களைஅடித்துள்ளனர்.
லாரா வேறு பல சாதனைகளுக்கும் சொந்தக்காரராக உள்ளார். 37 வயதான லாரா, 130டெஸ்ட் போட்டிகளில் ஆடி 11,904 ரன்களுடன் அதிக ரன் சேர்த்தவர்களில்முதலிடத்தில் உள்ளார்.
ஒரே இன்னிங்ஸில் அதிக ரன் சேர்த்தவர் என்ற பெருமையும் லாராவுக்கே சொந்தம்.2004ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் லாரா 400ரன்களைக் குவித்துள்ளார்.
இதேபோல டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை 150 ரன்களைச் சேர்த்தவர் என்றபெருமை பிராட்மனிடம் இருந்தது. அவர் மொத்தம் 18 முறை 150 ரன்களைக்கடந்துள்ளார். அந்தச் சாதனையையும் இந்த டெஸ்ட்டில் லாரா முறியடித்தார். அவர்19வது முறையாக 150 ரன்களைக் கடந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications