ஆசிய விளையாட்டு போட்டி தொடக்கம்
தோஹா:கத்தார் தலைநகர் தோஹாவில் 15வது ஆசிய விளையாட்டுப் போட்டி இன்று கோலாகல தொடக்க விழாவுடன்தொடங்குகிறது. டிசம்பர் 15ம் தேதி வரை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
15வது ஆசிய விளையாட்டுப் போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று தொடங்குகிறது. அடுத்த 30நாட்களுக்கும் ஆசிய அளவில் சிறந்த வீரர், வீராங்கனைகளின் விளையாட்டு விருந்தை ரசிகர்கள்கண்டுகளிக்கவுள்ளனர்.
தோஹாவில் உள்ள பிரமாண்டமான கலீபா ஸ்டேடியத்தில் இன்று தொடக்க நிகழ்ச்சிக்கு நடைபெறுகிறது.பல்வேறு கலைக் குழுக்களின் கோலாகல கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிட்னி ஒலிம்பிக் போட்டியின் கலை நிகழ்ச்சிகளை வடிவமைத்தவரான டேவிட் அட்கின்ஸ்தான் ஆசியவிளையாட்டுப் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியையும் வடிவமைத்துள்ளார். சிட்னி ஒலிம்பிக் போட்டியின்தொடக்க நிகழ்ச்சியை மிஞ்சும் வகையில் தோஹா தொடக்க விழா இருக்கும் என அட்கின்ஸ் கூறியுள்ளார்.
இதற்கு முன்பு இல்லாத வரை சிறப்பான கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அட்கின்ஸ் கூறியுள்ளார்.இந்தியாவைச் சேர்ந்த பாடகி சுனிதி செளகான், ஹாங்காங் பாப் பாடகர் ஜேக்கி சியூங், லெபனான் கலைஞர்மாகிதா எல் ரூமி, ஸ்பெயினைச் சேர்ந்த டெனோர் ஜோஸ் கரியார்ஸ்ஆகியோர் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடவுள்ளனர்.
ஆசிய நாடுகளைச் சேர்ந்த 8000க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தொடக்க விழா கலை நிகழ்ச்சியில்பங்கேற்கின்றனர். இவர்கள் அணியும் உடைகள் இந்தியா, சீனா, வியட்நாம், ஜப்பான். கத்தார், ஆஸ்திரேலியா,இங்கிலாந்து, சிரியா, பாலி, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.
விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வந்துள்ள ஆசிய நாடுகளைச் சேர்ந்த அணி வீரர் வீராங்கனைகள் தங்கதனியாக விளையாட்டு கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.இந்தியா சார்பில் 400 பேர் கொண்ட அணி தோஹா சென்றுள்ளது. 30 விளையாட்டுப் பிரிவுகளில இந்தியாபங்கேற்கிறது. கடந்த பூசான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 11 தங்கப் பதக்கம் உள்பட 35பதக்கங்களை அள்ளியது. இந்த முறை கூடுதலாக பதக்கங்களைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் இந்தியஅணி உள்ளது.
தடகளத்தில் அஞ்சு பாபி ஜார்ஜ், ஷோபா, சினிமோல் பாலோஸ், சாந்தி, குண்டு எரிதலில் நவ்ப்ரித் சிங், தட்டுஎறிதலில் விகாஸ் கெளடா ஆகியோர் தங்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்க்பபடுகிறது.
இதேபோல துப்பாக்கிச் சுடுதல், டென்னிஸ், கபடி உள்ளிட்டவற்றிலும் இந்தியா பதக்கங்களைக் குவிக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications