சச்சின் பழைய ஸ்டைலில் ஆட வேண்டும்: அஸார்
கொல்கத்தா :சச்சின் டெண்டுல்கர் தனது பாணியில், அடித்து ஆட வேண்டும். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு அவர் ஆடமுயல்வதே சமீபத்திய அவரது சரிவுகளுக்குக் காரணம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஸாருதீன்கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாரான சச்சின் டெண்டுல்கர் சமீப காலமாக சரியாக ஆடுவதில்லை. ஒருபோட்டியில் அட்டகாசமாக ஆடுவார், ஆனால் குறைந்தது 10 போட்டிகளிலாவது கட்டையைப் போட்டு விடுவார்.இப்படித்தான் அவர் கடந்த சில ஆண்டுகளாகவே சரிவுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடந்து முடிந்த ஒரு நாள் போட்டித் தொடரிலும் கூட சச்சின் தனது பழையஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்திய வீரர்களிலேயே அவர்தான் அதிக ரன்களை எடுத்திருந்தார்என்றாலும் கூட அவரது பேட்டிங் சராசரி 25க்கும் குறைவாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத் திறன் குறித்து முன்னாள் கேப்டன் அஸாருதீன், இலங்கைஅணியின் முன்னாள் கேப்டன் அரவிந்த டிசில்வா ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தாவில் இதுகுறித்து அஸாருதீன் கூறுகையில், சச்சினின் ஆட்டத்திறன் குறைந்து விட்டதாக நான்கருதவில்லை. அவரிடம் உள்ள திறமை இன்னும் அப்படியேதான் உள்ளது. அவரது பிரச்சினை ஆட்ட ஸ்டைலைமாற்றியதுதான்.
பழையபடி தனது பாணியில் அவர் அடித்து ஆட வேண்டும். அணி நிர்வாகம், சக வீர்ரகள் சொல்வதை அவர்கேட்க வேண்டிய அவசியம் இல்லை. வழக்கம் போல ஆடினால்தான் அவரது தற்போதைய சரிவுக்கு முடிவு கட்டமுடியும்.
பயிற்சியாளர் சேப்பலை மட்டும் தோல்விகளுக்கு குறை கூற முடியாது. வீரர்கள்தான் இதில் முக்கியப்பொறுப்பை ஏற்க வேண்டும்.
பயிற்சி ஆட்டத்தில் கங்குலி சிறப்பாக ஆடியுள்ளார். இது முக்கியமானது. மற்ற முன்னணி வீரர்கள் சரியாகஆடாத நிலையில் கங்குலி சிறப்பாக ஆடியிருப்பது கவனிக்கத்தக்கது என்றார் அஸாருதீன்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 99 போட்டிகளை ஆடியுள்ள அஸாருதீனை 100வது போட்டி வரை நீடிக்க விடாமல்தடுத்து நிறுத்தியவர் அப்போது கேப்டனாக இருந்த கங்குலிதான் என்று முன்பு செய்திகள் வெளியானது ஞாபகம்இருக்கலாம்.
சச்சின் குறித்து அரவிந்த டிசில்வா கூறுகையில், இன்னும் 5 ஆண்டுகளுக்கு சச்சின் ஆட வேண்டும். அவரிடம்அதே பழைய பேட்டிங் திறமை அப்படியேதான் உள்ளது. இன்றைய நிலையில் உலகிலேயே தலை சிறந்தபேட்ஸ்மேன் சச்சின்தான். பத்திரிகைககளின் விமர்சனங்கள்தான் அவரை நிெருக்கடிக்குள்ளாக்கி பேட்டிங்திறமையை முடக்கியுள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications