தோஹா-தங்கம் வென்ற பயஸ்-பூபதி, சானியா
தோஹா:ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு 2தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. மகளிர் ஒற்றையர் போட்டியில் சானியா மிர்ஸா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடி அபாரமாக ஆடி தங்கப் பதக்கத்தைத்தட்டிச் சென்றது. இந்த ஜோடி, தாய்லாந்தின் சன்சாய் சொன்சட் மற்றும் ரதிவட்டனா ஜோடியை எதிர்த்து ஆடி 5-7,7-6(9-7), 6-3 என்ற செட் கணக்கில் வென்றது. இந்தப் போட்டி மழையால் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
![]() |
இதையடுத்து கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் பயஸ், சானியா மிர்ஸா ஜோடி, ஜப்பானின் சதோஷி இவாபுச்சி,அகிகோ மொரிகேமி ஜோடியை சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த போட்டியின் இறுதியில், 7-5, 5-7, 6-2என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கத்தை தட்டியது.
மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சானியா மிர்ஸா, தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உலகபெண்கள் டென்னிஸில் 33வது இடத்தில் உள்ள சீனாவின் ஜீ ஜெங்குடன் நடந்த போட்டியில் சானியாவால்வெள்ளிப் பதக்கத்தையே பெற முடிந்தது.
![]() |
இரு வீராங்கனைகளும் ஆரம்பத்திலிருந்தே அபாரமாக ஆடினர். இருவரும் செட்டுகளை மாறி மாறிப்பிடித்ததால் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. இறுதியில் ஜீ ஜெங், 6-4, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.
மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணிக்கு 3வது இடம் கிடைத்தது. இதன் மூலம் வெண்கலப் பதக்கத்தைமகளிர் அணி பெற்றது. ஆடவர் ஹாக்கி அணி அரை இறுதிக்குக் கூட முன்னேறாமல் கேவலமாக வெளியேறியநிலையில் பெண்கள் ஹாக்கி அணி பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது இந்தியா 9 தங்கம், 18 வெள்ளி, 24 வெண்கலம் உள்பட மொத்தம் 51 பதக்கங்களுடன் 6வது இடத்தில்உள்ளது. சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications