பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா!
மும்பை:உலகின் டாப் 20 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா முதன் முறையாக இடம் பிடித்துள்ளது.
போஸ்டன் கன்சல்டிங் குழுமம் வெளியிட்டுள்ள 2006ல் உலக பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 19வதுஇடத்தையும் ரஷ்யா 20வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் பிரேசிலும் சீனாவும் 2000ம்ஆண்டிலிருந்தே இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனாவை அகியவற்றின் முதல் எழுத்துகளை சேர்ந்து பிரிக் (ஆகீஐஇ) எனப்பெயரிட்டுள்ளனர் பொருளாதார நிபுணர்கள். உலகின் எதிர்கால பொருளாதாரத்தில் இந்த நான்கு நாடுகளின்ஆதிக்கம் அதிகரிக்கும் என்கிறன்றனர் நிபுணர்கள்.
உலக நாடுகளின் சராசரி பொருளாதார வளர்சியை விட, இந்த நான்கு நாடுகளின் வளர்ச்சி இரு மடங்குஅதிகமாக இருக்குமாம். அதாவது 10.6 சதவீத வளர்ச்சியை எட்டுமாம்.
2010ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 13.3 சதவீதத்தை எட்டி ரூ. 45 லட்சம் கோடி அளவுக்கு இந்தியபொருளாதாரம் விஸ்வரூபம் எடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இப்போது உலக சொத்தில் இந்தியாவின் பங்கு 0.08 சதவீதம் தான். அமெரிக்காதான் இதில் முதல் இடத்தில்உள்ளது.












Click it and Unblock the Notifications