ஆண்கள் மீது செக்ஸ் புகார்-பரிதாப ஏர்ஹோஸ்டஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:கண்ணில் படுகிற ஆண்கள் மீதெல்லாம் செக்ஸ் டார்ச்சர் புகார் கொடுத்து போலீஸாரை அலைக்கழித்த பெண்ணைமன நல பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர்.

சென்னை தி.நகரைச் சேர்ந்தவர் உஷா. 36 வயதாகும் இவர் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார்.கணவரைப் பிரிந்து தனது 7 வயது மகளுடன் தனித்து வசித்து வருகிறார் உஷா.

சில வருடங்களுக்கு முன்பு மூளையில் இவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. அதன் பின்னர் இவரது போக்குமாறியது. ஆண்களைப் பார்த்தாலே ஒருவித வெறுப்பையும், துவேஷத்தையும் காட்ட ஆரம்பித்தார்.

இவரது நடவடிக்கையால் அதிருப்தியுற்ற அவர் வேலை பார்த்து வந்த விமான நிறுவனம், பணிப்பெண்பதவியிலிருந்து நீக்கியது. பின்னர் தி.நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக போலீஸில் புகார் கொடுத்தார்.இதுகுறித்து போலீஸார் விசாரித்தபோது புகாரில் உண்மை இல்லை என்று தெரியவந்தது. இதனால் நடவடிக்கைஎடுக்கால் விட்டு விட்டனர். தனது இந்த வேலையையும் இழந்தார் உஷா.

பின்னர் சில நாட்களுக்கு முன்பு வடபழனியில் உள்ள தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்றவர் அங்குள்ளஊழியர்களிடம் சண்டை போட்டார். பிறகு தி.நகரில் உள்ள ஒரு ஜவுளிக் கடை ஊழியர்களிடமும் சண்டைபோட்டார். எல்லோர் மீதும் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவே புகார் கூறினார் உஷா.

சமீபத்தில் மாம்பலம் காவல் நிலையம் சென்ற உஷா, அங்குள்ள போலீஸாரிடமும் கடும் வாக்குவாதத்தில்ஈடுபட்டார். உதவி ஆணையரை கடுமையாக திட்டினார்.

இதனால் அவருக்கு மன நோய் பாதிப்பு இருக்கலாம் என்ற முடிவுக்கு போலீஸார் வந்தனர். இதையடுத்துமுகப்பேரில் உள்ள பான்யான் என்ற சமூக நல அமைப்பைத் தொடர்பு கொண்ட போலீஸார், உஷாவைத்தங்களது பொறுப்பில் எடுத்துக் கொண்டு அவருக்கு மன நல ஆலோசனைகளை வழங்குமாறு கோரினர்.

பான்யான் அமைப்பினரும், உஷாவை தங்களது பொறுப்பில் அழைத்துச் சென்றனர். மன நல ஆலோசனைக்குப்பிறகும் உஷா இதுபோல நடந்து கொண்டால், அவரைக் கைது செய்வோம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+