எங்களை நீக்க முடியாது: எல்.ஜி., செஞ்சி.

Subscribe to Oneindia Tamil

திருச்சி:மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எங்களை நீக்கியதாக மதிமுக பொதுச் செயலாளர்வைகோ அறிவித்துள்ளது சட்டவிரோதமானது என்று மதிமுகவிலிருந்துநீக்கப்பட்டுள்ள எல்.கணேசன் கூறியுள்ளார். சேலத்தில் 29ம் தேதி பொதுக் குழுக்கூட்டம் நடைபெறும் என செஞ்சி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அவைத்தலைவர் எல்.கணேசன் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன்ஆகிய இருவரையும் கட்சியிலிருந்து நீக்கி நேற்று கம்பத்தில் நடந்த மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது சட்டவிரோதமானது என்று எல்.கணேசன் கூறியுள்ளார். இதுகுறித்து திருச்சியில்அவர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாளைக்குத்தான் (இன்று) எங்களதுஅடுத்த கட்ட நடவடிக்கையின் முதல் செயல் திட்டமாக எது இருக்கும் என்பதைஅறிவிக்கவுள்ளேன். நான் திட்டமிட்ட வகையில், அனைத்தும் சரியாக இருந்தால்சென்னையில் அறிவிப்பேன். இல்லாவிட்டால் தஞ்சையிலேயே அறிவிப்பேன்.

மதிமுகவில் நீடிப்பதா, அல்லது மதிமுகவிலிருந்து விலகுவதா அல்லது திமுகவில்இணைவதா இதில் ஒரு முடிவு எடுக்க வேண்டியது இருப்பதால், 40 ஆண்டு காலம்ஒன்றாக செயல்பட்ட தோழர்கள் மற்றும் கட்சி முன்னோடிகளை சந்தித்து ஆலோசித்துவருகிறேன்.

எங்களுக்கு 10 மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். யார் யார்என்பதை இப்போது கூற முடியாது. அப்படிக் கூறினால் எதிர் முனையில் இருந்துநெருக்கடி வரும்.

எங்களுக்கு பொதுக் குழு உறுப்பினர்களின் ஆதரவும் உள்ளது. விரைவில்பொதுக்குழுவையும் கூட்டுவோம். தேதியை அறிவிப்போம். அது போட்டி பொதுக்குழுவாகத்தான் அமையும். அதில் எத்தனை பேர் எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்என்பதைக் கூற முடியாது. அது போர் தந்திரம் என்றார் கணேசன். இந்தப் பேட்டிமதிமுகவிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பு கணேசன் தந்தது.

திருச்சியில் கணேசன் இருந்தபோது, அவரை திமுக அமைச்சர்கள் கே.என்.நேரு,செல்வராஜ் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

பின்னர் கணேசன் தஞ்சை சென்றதும் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செய்தி வந்துசேர்ந்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் கணேசன் பேசுகையில், என்னை நீக்கும்அதிகாரம் மாவட்டச் செயலாளர்களுக்கு இல்லை. இது சட்டவிரோத நடவடிக்கை.

ஒரு உள்நோக்கத்துடன் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதை எதிர்த்து நாங்கள்விரைவில் பதிலடி கொடுப்போம். மாவட்டச் செயலாளர்களைக் கூட்டி எங்களைநீக்கியது வழிகாட்டும் நெறி ஆகாது என்றார் கணேசன்.

தொடர்ந்து அவர் கூறுகையில், விரைவில் வைகோ கட்சியைக் கலைத்து விட்டுஅதிமுகவில் இணையப் போகிறார். இது வரலாற்றுக் கட்டாயம், நிர்ப்பந்தம். அந்தமுயற்சியைத் தடுப்போம் என்று கருதி எங்களைப் போன்றவர்கள் அங்கு இருப்பதைஅவர்கள் விரும்பவில்லை என்றார் கணேசன்.

சேலத்தில் 29ம் தேதி பொதுக்குழு:

இதற்கிடையே, கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து செஞ்சி ராமச்சந்திரன்கூறுகையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் என்னை நீக்கியதாக்கூறியுள்ளார்கள். அக்கூட்டத்தில் எங்களை நீக்கும் அதிகாரம் கிடையாது.பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை பொதுக்குழுவில்தான் நீக்க முடியும்.

மாவட்டச் செயலாளர்கள் பொதுக்குழு அந்தஸ்து உள்ளவர்கள்தான். மதிமுகவில்ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ள நிலையில் ஏதோ 35பேர் கூடி எங்களை நீக்கி இருப்பது மதிமுகவின் சட்டத் திட்டத்திற்கு விரோதமானது.

அவசரம், அவசியம் கருதினால் பொதுச் செயலாளர் நேரடியாக நடவடிக்கைஎடுக்கலாம். ஆனால் பதவியைப் பறிக்க முடியாது. அவரை நடவடிக்கை எடுத்தாலும்எங்களைப் போன்ற தலைமை நிர்வாகிகளை நீக்குவது போன்ற முக்கிய முடிவைபொதுக்குழுவில்தான் எடுக்க முடியும்.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சட்டவிரோதமானது. இதை எதிர்த்து வக்கீல் மூலம்நோட்டீஸ் அனுப்புவேன். சென்னையில் 25ம் தேதி நடைபெறும் பொதுக்குழுக்கூட்டத்தில் நான் கண்டிப்பாக கலந்து கொள்வேன். வருகிற விளைவை சந்திக்கத்தயாராக உள்ளேன் என்றார் செஞ்சியார்.

இதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் சேலத்தில் மதிமுக அவசரபொதுக் குழுக் கூட்டம் 29ம் தேதி காலை 10 மணிக்கு அவைத் தலைவர்எல்.கணேசன் தலைமையில் நடைபெறும். இக்கூட்டத்தில் அனைத்து பொதுக்குழுஉறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். பொதுக்குழு நடைபெறும்இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார் செஞ்சி ராமச்சந்திரன்.

எல்.கணேசனும், செஞ்சியாரும் கட்சியில் நீக்கப்பட்டுள்ள நிலையில் நாளையகூட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர். மேலும்போட்டி பொதுக் குழுக் கூட்டத்தையும் அவர்கள் கூட்டியுள்ளனர்.

இதனால் சென்னையில் நாளை நடைபெறும் பொதுக் குழுக் கூட்டத்தில் என்னநடக்கப் போகிறது என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகள், மதிமுகவினர்மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+