For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தந்தை ஆரம்பித்தார், மகன் முடித்தார்!

By Staff
Google Oneindia Tamil News

பாக்தாத்:இராக் மீது போர் தொடுத்து சதாமை நிலை குலைய வைத்தார் அமெரிக்க அதிபராகஇருந்த சீனியர் ஜார்ஜ் புஷ். இடையில் பில் கிளின்டன் ஆட்சியில் சதாம்தப்பியிருந்தார். அதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஜூனியர் ஜார்ஜ் புஷ், சதாமின்உயிரையே பறித்துள்ளார்.

அரபு மக்களின் ஹீரோவாக விளங்கியவர் சதாம் உசேன். பாலஸ்தீன பிரச்சினையில்அமெரிக்காவின் தலையீட்டையும், இஸ்ரேலின் அத்துமீறலையும் மிகக் கடுமையாககண்டித்தவர். பாலஸ்தீனர்களுக்கு உதவ அரபு நாடுகள் பல முன்வராத நிலையிலும்,பகிரங்கமாக அவர்களுக்காக குரல் கொடுத்தவர் சதாம்.

அமெரிக்கர்களிடமிருந்து அரபு மக்களைக் காக்கும் காவலன் நான் என்றுமுழங்கியவர். படு துணிச்சலான தலைவராக விளங்கியவர். யாருக்கும்பயப்படாதவர். குவைத்தை ஆக்கிரமித்தபோது சீனியர் ஜார்ஜ் புஷ் அனுப்பியஅமெரிக்க படைகள் ஈராக்கில் குண்டு மழை பொழிந்தபோதும் அதை படு தைரியமாகஎதிர்கொண்டு அமெரிக்க படைகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து திரும்பிப்போகச் செய்தார்.

ஆனால், அதிபராக ஜூனியர் ஜார்ஜ் புஷ் பதவியேற்றதுமே சதாமுக்குத்தான் முதல்குறி வைத்தார். நியூயார்க் இரட்டை கோபுரக் கட்டடம் மீதான தீவிரவாதத் தாக்குதலைசாக்காக எடுத்துக் கொண்டு ஈராக்கில் அணு ஆயுதங்கள் உள்ளது என்று கூறி ஈராக் மீதுஅமெரிக்கா படையெடுத்தது. அதன் வற்புறுத்தலால் இங்கிலாந்து உள்ளிட்ட சிலநாடுகளின் படைகளும் துணைக்கு வந்தன.

அமெரிக்கா தலைமையிலான படையினர் இந்த முறை மிகக் கடுமையானதாக்குதலைத் தொடுத்ததால் சதாமால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.தலைமறைவானார். ஆனால் அமெரிக்க படைகளிடம் அவர் சிக்கிக் கொண்டார்.

அதன் பின்னர் அமெரிக்கா அமைத்த சிறப்பு நீதிமன்றம் சதாமுக்கு தூக்கு தண்டனைவிதித்தது. மேல் முறையீட்டு நீதிமன்றம் அதை உறுதி செய்த அடுத்த சிலநாட்களிலேயே சதாம் தூக்கிலிடப்பட்டு விட்டார்.

சதாம் என்ற பூகம்பம் முடிந்து விட்டது. ஆனால் இதன் ஆஃப்டர் ஷாக் எப்படிஇருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடியாது. ஆனாலும் நிச்சயம் ஒருகடுமையான காலகட்டத்தை ஈராக்கும், அமெரிக்காவும் சந்கிக்க வேண்டியிருக்கும்என்றுதான் உலக அளவில் கருத்து நிலவுகிறது.

சதாம் வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிமன்றம், நீதிபதிகளை முடிவு செய்ததுஅமெரிக்கா தான். தீர்ப்பையும் அமெரிக்காவே முடிவு செய்து கொண்டு சதாமின்கதையை முடித்துவிட்டது.

இந்த நீதிமன்றத்தில் நடந்த விசாரணை குறித்து உலக அளவில் கேள்விகள் எழுந்ததுகுறிப்பிடத்தக்கது.

சதாம் உசேன் வாழ்க்கைக் குறிப்பு:

- பிறந்தது திக்ரித் அருகே அல் அவ்ஜா நகரில், 1937ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி.முழுப் பெயர் சதாம் உசேன் அல் திக்ரிதி.

- சன்னி முஸ்லீம். இருமுறை திருமணம் செய்தவர். 3 மகள்கள், 3 மகன்கள்.இவர்களில் இரண்டு மகன்களை அமெரிக் படைகள் கொன்று விட்டன.

- 1979ம் ஆண்டு முதல் முறையாக அதிபரானார்.

- 1980ல் ஈரான் மீது போர் தொடுத்தார். எட்டு ஆண்டுகள் இது நீடித்தது. இருதரப்பினும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாயினர்.

- 1990ம் ஆண்டு குவைத் மீது படையெடுத்தார். அமெரிக்கா தலைமையிலனபடைகள் 1991ம் ஆண்டு ஈராக் படைகளை குவைத்திலிருந்து விலகச் செய்தன.

- 2003 மார்ச்சில் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. டிசம்பர் 13ம் தேதி திக்ரித்அருகே பதுங்கு அறையிலிருந்து சதாம் பிடிக்கப்பட்டார்.

- 2005 அக்டோபரில் 148 ஷியா முஸ்லீம்களைக் கொன்றது தொடர்பான சதாம்மீதான வழக்கு விசாரணை தொடங்கியது.

- 2006 ஏப்ரலில் குர்து இன மக்களை கொன்ற வழக்கில் விசாரணை தொடங்கியது.

- 2006 நவம்பர் 5ம் தேதி ஷியா முஸ்லீம்கள் கொலை வழக்கில் சதாம் உள்ளிட்ட 3பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

- 2006 டிசம்பர்26ம் தேதி சதாம் உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதிசெய்யப்பட்டது.

- 2006 டிசம்பர் 30ம் தேதி சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார். போராட்டங்கள்நிறைந்த அவரது சகாப்தம் முடிவுக்கு வந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X