For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மரணம் சதாமை மாவீரனாக்கி விட்டது: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:மரண தண்டனை சதாம் உசேனை மாவீரனாக்கி விட்டது என்று முதல்வர் கருணாநிதிகருத்து தெரிவித்துள்ளார்.

சதாம் உசேன் மரண தண்டனை குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளஅறிக்கை:

மரண தண்டனை, மனித வாழ்வின் சில பக்கங்களை கிழித்து எறிந்து விடுகிறது. பிழைமலிந்த அந்த பக்கங்களுக்கு பதிலாக திருத்தப்பட்ட புதிய பதிப்பு வெளி வரமுடியாமலேயே செய்து விடுகிறது.

இது சாதாரண மனிதருக்கு மாத்திரமல்ல, சர்வாதிகாரிகளுக்கும் பொருந்தக் கூடியவாசகம்தான். சதாம் உசேனுக்கும் கூட என்று கடந்த நவம்பர் முதல் வாரத்திலேயேஎழுதினேன்.

மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, கைவிடப்பட வேண்டிய அந்த மரண தண்டனைஇன்றைக்கு சதாமை மாவீரனாக்கி விட்டது. அவர் ஆட்சியில் மனித உடல்கள்குவிக்கப்பட்டதே என்பர்.

கலிங்கத்துப் போரிலே கணக்கற்ற உயிர்களை போக்கிய பிறகுதானே அசோகர்பவுத்தர் ஆனதாக வரலாறு. அந்த அசோக சின்னம் தானே இந்தியாவின் கீர்த்தியைபாடிக் கொண்டிருக்கிறது.

போரிலே தோற்ற போரஸ் மன்னிடம் அலெக்சாண்டர் நடந்து கொண்ட முறையைசதாம் உசேனிடம், அமெரிக்கா பின்பற்றியிருக்கலாம். வெறிக்குணத்தைக் காட்டிவெகு மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்க வேண்டியதில்லை. அவசரத்தில் தீர்ப்பு,ஆத்திரத்தில் அநீதி என்று கூறியுள்ளார் கருணாநிதி.

சதாம் கதி யாருக்கும் வரக் கூடாது: ஜெயலலிதா

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட செய்தியைக்கேள்விப்பட்டதும் உலகுக்கு நம்ப முடியாத அதிர்ச்சி ஏற்பட்டது. அமெரிக்க அதிபர்தூண்டுதலின் பேரில் ஈராக் கோர்ட் மூலமாக இந்த தண்டனைநிறைவேற்றப்பட்டுள்ளது.

சதாம் உசேனை டிசம்பர் 31ம் தேதிக்குள் தூக்கிலிட வேண்டும் என்று அதிபர் புஷ்கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. புஷ்ஷை முழு திருப்தி அடையச் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் தனக்கு வேண்டாத நாடுகளின் உள் விவகாரத்தில் தலையிட்டு தான்விரும்பும் முடிவை மேற்கொள்ளும் எஜமானனைப் போல அமெரிக்கா காட்டிக்கொள்வது தெளிவாகியுள்ளது.

தனது ராணுவ பலத்தின் மூலம் ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவதுமட்டுமன்றி, அந்த நாட்டின் தினசரி அரசியல் நிகழ்வுகள் அமெரிக்க அதிபரின்விருப்பத்தின் பேரிலேயே நடைபெறும் என்பதை உலகுக்கு அந்த நாடுஉணர்த்தியுள்ளது.

ஈராக்கில் நிகழ்ந்தது போன்ற சம்பவம் இனி வேறு எங்கும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அமெரிக்காவின் கையில் மாட்டிக் கொண்டு எந்த நாடும் சிக்கிக்கொள்ளக் கூடாது. சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி உலகின் வேறு எந்த நாட்டுத்தலைவருக்கும் ஏற்படக் கூடாது.

உலக நாடுகளை தனது பாசிச, முதலாளித்துவ திட்டங்கள் மூலம் அடிமைப்படுத்தநினைக்கும் அமெரிக்காவை அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டியநேரம் வந்து விட்டது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

சர்வதேச விதிகள் அனைத்தையும் மீறி ஈராக் மீது போர் தொடுத்து பேரழிவைஏற்படுத்திய ஏகாதிபத்திய நாடுகளின் நிர்ப்பந்தத்திற்கு பயந்து ஈராக்கின் கைப்பாவைஅரசு சதாம் உசேனை தூக்கிலிட்டுக் கொன்றுள்ளது.

மாவீரர்களுக்கு என்றுமே மரணம் இல்லை. சதாம் உசேனை மரணம் தழுவிக்கொண்டிருந்தாலும் சரித்திரத்தில் அவர் மாவீரனாகத்தான் போற்றப்படுவார்.

அவருக்கு மரண தண்டனை விதித்து அவசர கோலத்தில் அதை நிறைவேற்றியசக்திகளும், அவர்களுக்குத் துணை போன ஈராக் பொம்மை அரசும் மக்களால்தூற்றப்படுவார்கள். சரித்திரத்தில் நீங்காத கறையாய் காட்சியளிப்பார்கள் என்றுகூறியுள்ளார் ராமதாஸ்.

தி.க. தலைவர் கி.வீரமணி:

சதாம் புதைக்கப்படுகிறார். புஷ்ஷின் அடாவடித்தனத்தால் அடக்குமுறைகோரத்தாண்டவத்தால் தீவிரவாதம் விதைக்கப்படுகிறதா என்பது பற்றி நாளையவரலாறு நிச்சயம் தீர்ப்பளிக்கத்தான் போகிறது.

இந்திய தேசியலீக் தலைவர் பஷீர் அகமது:

அமெரிக்க அரசின் தூண்டுதலின் பேரில் சதாம் உசேனுக்குத் தூக்குத் தண்டனைஒருதலைபட்சமாக விதிக்கப்பட்டிருக்கிறது. அது அவசரம் அவசரமாகநிறைவேற்றப்பட்டிருக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X