For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொந்த ஊரில் சதாம் உடல் அடக்கம்

By Staff
Google Oneindia Tamil News

திக்ரித்:தூக்கிலிடப்பட்ட சதாம் உசேனின் உடல் இன்று அதிகாலை அவரது சொந்த ஊரானதிக்ரித் நகருக்கு அருகே உள்ள அவ்ஜா கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Saddam being hanged148 ஷியா முஸ்லீம்களைக் கொல்ல உத்தரவிட்ட வழக்கில் சதாம் உசேனுக்கு தூக்குத்தண்டனை அறிவிக்கப்பட்டு, நேற்று அதிகாலையில் அவசரம் அவசரமாகநிறைவேற்றப்பட்டு சதாம் கொல்லப்பட்டார்.

தனது உடலை ஏமன் நாட்டில் தற்காலிகமாக அடக்கம் செய்ய வேண்டும். ஈராக்கைவிட்டு அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் ஈராக்கில் மறு அடக்கம் செய்யவேண்டும் என சதாம் உசேன் விருப்பம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சதாமின் உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சதாமின் மகள்ரஹத் கோரியிருந்தார். இந்தக் கோரிக்கையை ஈராக் அரசு நிராகரித்து விட்டது.சதாமின் உடல் ஈராக்கில்தான் அடக்கம் செய்யப்படும் என அது அறிவித்தது.

மேலும் சொந்த ஊரான அவ்ஜா கிராமத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என விடுத்தகோரிக்கையையும் அது முதலில் நிராகரித்தது. இருப்பினும் சதாம் உடலை சொந்தஊரில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என திக்ரித் நகர பழங்குடியின தலைவர்கள்கோரிக்கை விடுத்தனர்.

Saddam being hangedஇதை ஏற்ற ஈராக் அரசு அவ்ஜாவில் சதாமை அடக்கம் செய்ய சம்மதித்தது.இதையடுத்து சதாமின் உடல் அமெரிக்க விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் திக்ரித்நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.

திக்ரித் நகருக்கு உடல் வந்தவுடன், சதாம் சார்ந்த அல்பு நஸீர் பழங்குடியினத் தலைவர்அலி அல் நிடா, சதாமின் உடலைப் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து உடல் அவ்ஜாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குஆயிரக்கணக்கான சன்னி முஸ்லீம்கள் கூடி சதாமின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலிசெலுத்தினர்.

பின்னர் முஸ்லம் மத சடங்குகள் நிறைவேற்றப்பட்டு சதாமின் உடல் அடக்கம்செய்யப்பட்டது. சதாம் குடும்பத்திற்குச் சொந்தமான இடத்தில் அடக்கம் நடதந்தது.இங்குதான் சதாமின் மகன்களான உதய் மற்றும் குவாசி ஆகியோரின் உடல்களும்அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க படையினரால் 2003ம் ஆண்டு குவாசியும், உதய்யும் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X