சிறந்த முதல்வர்கள்: 4வது இடத்தில் கருணாநிதிராகுலுக்கு 2.3% ஆதரவு: அத்வானிக்கு 1.8% !
டெல்லி:சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியும், இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழும் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், நாட்டிலேயே சிறந்த முதல்வர் வரிசையில் ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு முதலிடம்கிடைத்துள்ளது. கருணாநிதிக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள பஞ்சாப், உத்தராஞ்சல், உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் சிஎன்என்-ஐபிஎன்மற்றும் ஹிந்துஸ்தான் டைமஸ் இணைந்து கருத்துக் கணிப்பை நடத்தின.
இதில் பஞ்சாபிலும் உத்தராஞ்சலிலும் ஆளும் காங்கிரஸ் கட்சியே முன்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது.பாஜக கூட்டணிக்கு இரண்டாம் இடமே கிடைத்துள்ளது.
அதே போல உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சியும்-மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சியும் தலா 25 சதவீத மக்களின் ஆதரவோடு சம பலத்தில் உள்ளன. இங்கு 16 சதவீத மக்களின்ஆதரவுடன் பாஜக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் 12 சதவீத ஆதரவோடு தொடர்ந்துநாலாவது இடத்திலேயே உள்ளது.
நாட்டின் 21 மாநிலங்களிலும் ஒட்டுமொத்தமாக ஒரு கருத்துக் கணிப்பை ஐபிஎன் தொலைக்காட்சி நடத்தியது.
இதன்படி நாடாளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் காங்கிரஸ் கூட்டணிக்கு 300 இடங்கள் கிடைக்கும்என தெரியவந்துள்ளது. இதன் மூலம் இடதுசாரி கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே காங்கிரஸ் கூட்டணியால்ஆட்சி அமைக்க முடியும்.
அதேசமயம், பாஜக கூட்டணியின் பலம் 189 என்ற தற்போதைய நிலையிலிருந்து 115 ஆக குறைந்து விடும்எனவும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
அடுத்த பிரதமராக சோனியா காந்தி வர வேண்டும் என 28.3 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். வாஜ்பாய்க்கு18.5 சதவீதம் பேரும், மன்மோகன் சிங்குக்கு 12.1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ராகுல்காந்தியும், முலாயம் சிங் யாதவும் தலா 2.3 சதவீத ஆதரவைப் பெற்றுள்ளனர். அத்வானிக்கு வெறும் 1.8சதவீத மக்களின் ஆதரவே கிடைத்துள்ளது.
மன்மோகன் சிங்கின் ஆட்சி திருப்திகரமாக உள்ளதாக 80 சதவீதம் பேரும், இன்னொரு முறை அவரது ஆட்சிக்குவாய்ப்பளிக்கலாம் என 54 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
இதேபோல சிறந்த முதல்வர் யார் என்று அந்தந்த மாநிலங்களில் கருத்துக் கணிப்பும் நடத்தப்பட்டது. அதன்படிநாட்டிலேயே சிறந்த முதல்வராக ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் தேர்வாகியுள்ளார். அவரது செயல்பாடுகள்பெரும் பாராட்டைப் பெற்றுள்ளன.
பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு 2 வது இடம் கிடைத்துள்ளது. இருப்பினும், நவீனுக்கும், நிதீஷுக்கும்இடையிலான புள்ளி இடைவெளி மிகவும் குறைவே.
3வது இடத்தை கேரள முதல்வர் அச்சுதானந்தன் பெற்றுள்ளார். 4வது இடத்தில் தமிழக முதல்வர் கருணாநிதிஉள்ளார். கடந்த ஆண்டும் கருணாநிதி இதே இடத்தில் தான் இருந்தார்.
5வது இடத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி உள்ளார். மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டச்சார்யா, டெல்லிமுதல்வர் ஷீலா தீக்ஷித், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மத்திய பிரதேச முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா,ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆகியோரின் செல்வாக்கில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி பலமாகவே உள்ளதாகவும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் மிகச் சிறந்த மக்கள் கருத்துக் கணிப்பியல் நிபுணர் யோகேந்திரா தலைமையிலான குழு இந்தஆய்வை இந்துஸ்தான் டைம்சும்-சிஎன்என் ஐபின் தொலைக்காட்சியும் நடத்தின.
ஆய்வு முடிவுகளை ஐபின் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய் தொகுத்து வழக்கினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications