அழகிரி பிறந்த நாள்: குலுங்கியது மதுரை
மதுரை:முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் 56வது பிறந்த நாள் விழாவை மதுரை திமுகவினர் பிரமாண்டமாக கொண்டாடினர். முதல்வர்நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். மதுரை நகரம் முழுவதும் கட் அவுட்கள், பேனர்கள் நிரம்பி வழிந்தன.
மு.க.அழகிரிக்கு நேற்று 56வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி பிரமாண்டமான பிறந்த நாள் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.சத்யசாய் நகரில் உள்ள அழகிரியின் வீட்டுக்கு காலையில், முதல்வர் கருணாநிதி வந்தார்.
அவரது முன்னிலையில் 56 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டினார் அழகிரி. அவருக்கு கேக்கின் ஒரு துண்டை எடுத்து கருணாநிதி ஊட்டினார்.பின்னர் அப்பா கருணாநிதி, அம்மா தயாளு அம்மாள் ஆகியோர் கால்களில் விழுந்து வணங்கினார் அழகிரி.
இந்த நிகழ்ச்சியில் உயர் போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து ராஜா முத்தையா மன்றத்திற்குஅழகிரி சென்றார். அங்கு பொதுமக்கள் முன்னிலையில் தனது பிறந்த நாளை படு பிரமாண்டமாக கொண்டாடினார்.
மதுரை மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளும், இளைஞர் பட்டாளமும் நீண்ட வரிசையில் நின்று அழகிரிக்கு வாழ்த்துதெரிவித்தனர்.
பொன்னாடை முதல் தங்கச் சங்கிலி வரை பல்வேறு வகையான பரிசுப் பொருட்கள் அழகிரிக்கு வழங்கப்பட்டன. பிறந்த நாளையொட்டிஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட நல உதவிகளையும் அழகிரி வழங்கினார். விழாவுக்கு வந்தவர்களுக்கு வயிறார மட்டன் பிரியாணிபரிமாறப்பட்டது.
ஏராளமான அமைச்சர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். அவர்களே பிறந்த நாள் விழாவுக்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
அழகிரி பிறந்த நாளையொட்டி மதுரை மாநகரமே அமர்க்களப்பட்டது. எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் பேனர்கள் கண்களைப் பறித்தன.பிரமாண்டமான கட் அவுட்கள் பளிச்சிட்டன.
இதுதவிர மதுரையின் மகத்துவமே என்று ஆரம்பித்து நடமாடும் குறளே, இளவலே, வள்ளலே என்ற ரீதியில், ஏகப்பட்ட வசனங்கள் அடங்கியவாழ்த்து போஸ்டர்களும் மதுரை மக்களை பயமுறுத்தி விட்டன.
விவேகானந்தர், சத்ரபதி சிவாஜி, சுபாஷ் சந்திர போஸ், கிரிக்கெட் வீரர், கால்பந்து வீரர் போன்ற உருவங்களில் அழகிரியை சித்தரித்து கட்அவுட்கள், போஸ்டர்கள் இடம்பெற்றிருந்தன.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 72 வார்டுகளிலும் கட் அவுட்கள், போஸ்டர்கள், பேனர்கள் நிரம்பி வழிந்தன. இதுவரை இல்லாத அளவுக்குஅழகிரியின் பிறந்த நாளை படு தடபுடலாக கொண்டாடி விட்டனர் அவரது ஆதரவாளர்கள்.
இந்தப் பிறந்த நாள் விழா மூலம், தென் மாவட்டங்களின் அசைக்க முடியாத கமாண்டர் அழகிரிதான் என்பதை தலைமைக்கும் மறைமுகமாகஉணர்த்தியுள்ளது அழகிரி அன் கோ.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications