பெட்ரோல்-டீசல் விலைகள் குறைகின்றன
Subscribe to Oneindia Tamil
டெல்லி:இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படவுள்ளன.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 1ம் குறைக்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதாலும், பண வீக்கத்தை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங்குடன் பல சுற்று பேச்சு நடத்திய பின் இந்த விலை குறைப்பை பெட்ரோலியத்துறைஅமைச்சர் முரளி தியோரா அறிவித்தார்.
இந்த விலைகள் வரும் வாரங்களில் மேலும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரி குறைக்கப்படலாம் என்று தெரிகிறது. இதனால் மேலும் விலை குறையும்.












Click it and Unblock the Notifications