நாடாளுமன்ற பட்ஜெட் தொடர் நாளை துவக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.
இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி அப்துல் கலாமஉரையாற்றுகிறார்.
வரும் 26ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 28ம் தேதி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகின்றன. 27ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கலாகிறது.
விலைவாசி உயர்வு, பண வீக்கம், உத்தரப் பிரதேச மாநில விவகாரம், நொய்டா படுகொலைகள், உல்பா தாக்குதல், இந்தியா-பாகிஸ்தான் ரயில்குண்டு வெடிப்பு ஆகிய விவகாரங்கள் இந்தக் கூட்டத் தொடரில் முக்கிய விவாதப் பொருளாக உள்ளன.
மேலும் வரி சீர்திருத்தங்கள் கோரி வரும் இடதுசாரிகள் மத்திய அரசின் தாராளமயமாக்கல் கொள்கைகள் தொடர்பாக பிரச்சனை கிளப்பவுள்ளன.












Click it and Unblock the Notifications