ப.சிதம்பரம் பட்ஜெட்: எது குறையும், எது கூடும்?
டெல்லி:மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்த சில முக்கியத் துளிகள்:
பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி 8 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல்ஆகியவற்றின் விலை கிட்டத்தட்ட 50 காசுகள் வரை குறைய வேண்டும். ஆனால் இந்தக் குறைப்பின் மூலம் கிடைக்கும் லாபத்தை மக்களுக்குப்போக விடாமல், பெட்ரோலியத் துறை தானே எடுத்துக் கொள்ளப் போகிறதாம்.
இதன் காரணமாக மக்களுக்கு எந்தப் பலனும் இருக்காது. வழக்கமான விலையிலேயே பெட்ரோல், டீசல் விலை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.எனவே உற்பத்தி வரிக் குறைப்பால் அரசுக்கு மட்டுமே லாபம், மக்களுக்கு அல்ல.
கல்வி நிதி:
கல்வி நிதிக்கான துணை வரியை 3 சதவீதமாக உயர்த்தி விட்டார் சிதம்பரம். அனைத்து நேரடி வரிகள் மீதும் கூடுதலாக 1 சதவீதத்தை சேர்த்துஇனிமேல் கல்விநிதிக்காக 3 சதவீதத்தை கட்ட வேண்டும்.
இதன் காரணமாக கார் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன. முதல் நிறுவனமாக மாருதி நிறுவனம்தனது தயாரிப்புகளின் விலையை வருகிற 15ம் தேதி முதல் உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது.
கல்வி நிதிக்கான துணை வரி மூலம் ஆண்டுக்கு அரசுக்கு ரூ. 5,300 கோடி கிடைக்கப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வருமான வரி உச்சவரம்பு:
ஊதியம் வாங்குவோர் மற்றும் நடுத்தர வகுப்பினர் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தது வருமான வரி உச்சவரம்பு உயர்வைத்தான். தற்போது 1லட்சமாக உள்ள உச்சவரம்பம் ஒன்றரை லட்சமாக உயரும் என்று அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்தனர்.
ஆனால் அத்தனை பேருக்கும் அல்வா கொடுத்து விட்டார் சிதம்பரம். வெறும் 10 ஆயிரம் ரூபாயை மட்டுமே அதிகரித்துள்ளார். இந்த சொற்பஉயர்வால் வருமான வரிவிதிப்பில் 1000 ரூபாய் வரை குறையும். சிதம்பரத்தின் இந்த சில்லறை உயர்வால், நடுத்தர வகுப்பினரும், மாத ஊதியம்வாங்குவோரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பிஸ்கட், சமையல் எண்ணை, ரெடிமிக்ஸ் உணவுப் பொருட்கள், செருப்பு ஆகியவற்றின் விலைகள் குறையும். அதேசமயம், அத்தியாவசியப்பொருட்களான அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்கப்போவதில்லை.
ஆனால் நாய், பூனை உள்ளிட்டவற்றை அதிகம் வசிப்போருக்கு இந்த பட்ஜெட்டில் சந்தோஷ செய்தி உள்ளது. இவற்றுக்கான இறக்குமதிசெய்யப்பட்ட தீவனத்திற்கு வரி குறைக்கப்பட்டுள்ளதால் நாய்க்கு நிறைய வாங்கிப் போடலாம்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications