பட்ஜெட்-தமிழக அமைச்சரவை ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை கோட்டையில் நடந்தது.
திமுக அமைச்சரவை பதவியேற்ற பின்னர் மதல் முறையாக சமீபத்தில் சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டன. அதன் பின்னர் முதல் அமைச்சரவைக் கூட்டம்இன்று கூட்டப்பட்டது.
இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனைத் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர். துரைமுருகன் டெல்லி சென்றுள்ளதால் வர முடியவில்லை.
இன்றைய கூட்டத்தில் 2007-08ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் கடல் நீரைக் குடிநீராக்கும்திட்டம் உள்ளிட்ட பல முக்கியத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications