கிப்ஸ் கலக்கல்-தெ.ஆ.விடம் ஹாலந்து தோல்விஇங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அபாரம்
செயிண்ட்லூசியா:கிப்ஸின் அதிரடி ஆட்டத்தால் தென் ஆப்ரிக்கா ஹாலந்து அணியை 221 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிப்ஸ் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள்அடித்து உலக சாதனை படைத்தார். மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தைவீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
செயின்ட் கிட்சில் நடந்த உலக கோப்பை தொடரின் "ஏ பிரிவு ஆட்டத்தில் நேற்று தென் ஆப்ரிக்கா, ஹாலந்து அணியும் மோதின. இதில் மழையால்ஆட்டம் 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இதனால் ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப் பட்டது. டாஸ் வென்ற ஹாலந்து அணிதென்ஆப்பிரிக்காவை பேட் செய்ய பணித்தது.
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய டிவில்லியர்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் வெளியேறினார். இதையடுத்துகளம் இறங்கிய காலிஸ், கேப்டன் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்து ஹாலந்து அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர்.
![]() |
அதிரடியாக ஆடிய ஸ்மித் 59 பந்துகளில் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரை அடுத்து களம் இறங்கிய கிப்ஸ், காலிஸ்சுடன் ஜோடி சேர்ந்துஹாலந்து பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். இவர் ஆட்டத்தின் 29வது ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து புதியஉலக சாதனை படைத்தார். கிப்ஸ் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய காலிஸ் ஒரு நாள் போட்டியில் தனது 15வது சதத்தை பூர்த்தி செய்தார். கிப்ஸ்சை தொடர்ந்து களம் இறங்கியபவுச்சர் 21 பந்துகளில் அரை சதம் அடித்து உலககோப்பை தொடரில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார்.
இறுதியில் தென்ஆப்ரிக்கா அணி 40 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் எடுத்தது. காலிஸ் 128 ரன்களுடனும், பவுச்சர் 75ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இமாலய இலக்கையை விரட்டிய ஹாலந்து அணி 40 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன் மட்டும் எடுத்து படுதோல்வி அடைந்தது. இந்தஅணியில் அதிகபட்சமாக டென்டஸ்சேட் 57 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான "சி" பிரிவு ஆட்டம் நேற்று செயிண்ட்லூசியா நகரில்நடைபெற்றது. இதில் நியூசிலாந்து கேப்டன் பிளமிங் டாஸில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணியை முதலில்பேட் செய்ய பணித்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் மைக்கேல் வான் மற்றும் எட்ஜாய்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே எட்ஜாய்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களம் இறங்கிய இயான் பெல்(5)ரன்களிலும், மைக்கேல் வான்(26) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களம் இறங்கியகோலிங்வுட் (31), பீட்டர்சன் (60) சேர்ந்து இங்கிலாந்து அணியின் விக்கெட் சரிவை சிறிது நேரம் தடுத்தனர்.
அணியின் எண்ணிக்கை 134 ஆக இருந்த போது பீட்டர்சன் (60) ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில்ஆட்டமிழந்ததால் இங்கிலாந்து அணி 150 ரன்னுக்குள் 7 விக்கெட் இழந்து தவித்தது. பின்வரிசை வீரர்களான நிக்சன் 42ரன்னும், பிளங்கட் 29ரன்னும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இங்கிலாந்து அணிக்கு கெளரவ ரன் எடுக்க உதவியாக இருந்தனர். இங்கிலாந்து அணி 50 ஓவர்முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது.
எளிமையான இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே பெரும் அடியாக அமைந்தது. அந்த அணியின் கேப்டன் பிளமிங் 7ரன்களும், வின்சென்ட், டெய்லர் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமலும், மெக்மிலன் 27 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து நியூசிலாந்து அணியின் ஆல்ரவுன்டர் ஸ்டைரிஸ்சும், ஓரமும் அடுத்த விக்கெட் விழாமல் நியூசிலாந்து அணியை வெற்றி பாதைக்குஅழைத்து சென்றனர். முடிவில் நியூசிலாந்து அணி 41 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 210 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஸ்டைரிஸ் 87 ரன்னும், ஓரம் 63 ரன்னும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த போட்டியில்ஸ்டைரிஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications