ஹெய்டன் அதிரடி: தெ.ஆ.வை வென்றது ஆஸிகென்யாவை வீழ்த்தியது இங்கிலாந்து

Subscribe to Oneindia Tamil

செயிண்ட் கீட்ஸ்:உலகக் கோப்பைப் போட்டியின் ஏ பிரிவில் நடந்த கடைசி லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா. மாத்யூ ஹைடன்அபாரமாக ஆடி உலகக் கோப்பைப் போட்டியிலேயே குறைந்த பந்துகளில் சதம் போட்ட வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

ஆஸ்திரேலியாவும், தென் ஆப்பிரிக்காவும் ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டன. இதனால் நேற்றைய போட்டியின் முடிவு எந்தபாதிப்பையும் ஏற்படுத்தாது. இருப்பினும் இரு பெரும் அணிகளின் மோதல் என்பதால் ரசிகர்கள் இப்போட்டியை வெகுவாக எதிர்பார்த்திருந்தனர்.

Mathew Hayden

டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா கேப்டன் ஸ்மித் ஆஸ்திரேலியாவை முதலில் ஆட அழைத்தார். தொடக்க ஆட்டக்காரர்களான ஹைடனும்,கில்கிறைஸ்ட்டும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். குறிப்பாக ஹைடனின் ஆட்டத்தில் அணல் பறந்தது.

வந்த பந்துகளையெல்லாம் பவுண்டரிகளுக்கு விரட்டிய ஹைடன், 66 பந்துகளில் 100 ரன்களைத் தாண்டி புதிய சாதனை படைத்தார். உலகக்கோப்பைப் போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் ஹைடனுக்குக் கிடைத்தது.

இதேபோல கேப்டன் ரிக்கி பான்டிங் சிறப்பாக ஆடி 91 ரன்களைக் குவித்தார். மைக்கேல் கிளார்க்கும் தன் பங்குக்கு 92 ரனகளை எடுத்தார்.இறுதியில் 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 377 ரன்களை எடுத்தது.

378 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தென் ஆப்பிரிக்கா விளையாடினாலும் அந்த அணியின் வீரர்களும்அதிரடியாக ஆடினர்.

தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஸ்மித், டிவில்லியர்ஸ் ஆகிய இருவரும் அதிரடியாக ஆடினர். டிவில்லியர்ஸ் 92 ரன்களை எடுத்தார். ஸ்மித்74 ரன்கள் சேர்த்தார்.

சிறப்பாக ஆடிய தென் ஆப்பிரிக்க அணியின் பின் வரிசை ஆட்டக்காரர்கள் கை கொடுக்காததால், 48 ஓவர்களில் 294 ரன்கள் எடுத்துஆட்டமிழந்தது. இதன் மூலம் 84 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது.

கென்யா தோல்வி:

சி பிரிவில் நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்தும், கென்யாவும் மோதின. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் போட்டியை சந்தித்தன. இந்தப்போட்டியில் வெல்லும் அணி சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை.

Ed Joycehits

மழை காரணமாகஆட்டம் தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற கென்ய கேப்டன் டிக்கோலா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கென்ய வீரர்கள் திணறினர். டிக்கோலா மட்டும் சிறப்பாக ஆடி 76 ரன்களைச் சேர்த்தார். இறுதியில், 43ஓவர்களில் கென்யா அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 177 ரன்களை எடுத்தது.

பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து 33 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+