புதுவையிலும் இலவச டிவி: ரங்கசாமி
புதுச்சேரி:தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மாநிலத்திலும் ஏழை எளியோருக்கு அடுத்த ஆண்டு முதல் இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபையில் இன்று 2007-08ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பையும் வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்து அவர் பேசுகையில், புதுச்சேரி துறைமுக விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்து முடிவெடுக்க நான்கு குழுக்கள் அமைக்கப்படும்.
ஜூன் 1ம் தேதி முதல் புதுவையிலும் வாட் வரி அமல்படுத்தப்படும். அடுத்த ஆண்டு முதல் ஏழை, எளியவர்களுக்கு இலவச வண்ணத்தெலைக்காட்சி வழங்கப்படும்.
காரைக்குடி, புதுச்சேரி பகுதிளில் 30 கிலோமீட்டர் தொலைவுக்கு கடலோரங்களில் சுனாமி தடுப்புச் சுவர் அமைக்கப்படும்.
இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் அயல்நாட்டு மது வகைகளுக்கான விற்பைன வரி முற்றிலும் நீக்கப்படும் என்றார் ரங்கசாமி.
பட்ஜெட்டில் புதிதாக வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications
