பாலாற்றில் கை வைத்தால்... திருப்பதியைகேட்போம்: பாமக கடும் எச்சரிக்கை
வேலூர்:பாலாற்றில் அணை கட்டும் முடிவை ஆந்திர அரசு கைவிடாவிட்டால் திருப்பதியை மீட்க தமிழக மக்கள் போராட்டத்தில் குதிக்க நேரிடும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரில், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாலாற்றின் குறுக்கே அணை கட்டவுள்ள ஆந்திர அரசின் செயல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி விட்டது. 26ம் தேதி அணை கட்ட ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படவுள்ளதாகவும், பணிகள் தொடங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலாறு ஏற்கனவே வறண்டு போய்க் கிடக்கிறது. மழை வந்தால்தான் ஏதோ ஓரளவாவது தண்ணீர் வரும். இந்த நிலையில் அணையைக் கட்டி விட்டல் சுத்தமாக தண்ணீரே வராமல் போய் விடும்.
எனவே தமிழக அரசு எக்காரணம் கொண்டும், பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசை அனுமதிக்கக் கூடாது. பாலாற்றில் தமிழகத்தின் உரிமையை நிலைநிறுத்த வேண்டும்.
தமிழக மக்களின் கோரிக்கையையும் மீறி ஆந்திர அரசு அணை கட்டினால் தமிழக மக்கள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபடுவார்கள். இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். பாலாற்றில் ஆந்திர அரசு உரிமை கொண்டாடினால் திருப்பதியை மீட்க தமிழக மக்கள் போராட்டத்தில் குதிப்பார்கள் என்றார் மணி.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications