இன்று திமுகவில் இணைகிறார் ராஜ் டிவி அதிபர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ராஜ் டிவியின் அதிபரான ராஜேந்திரன் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் விழாவில் திமுகவில் இணைகிறார். அவருடன் சுமார் 1,000 பேரும் இணைகின்றனர்.
திமுகவும், ராஜ் டிவியும் இணைந்து கலைஞர் தொலைக்காட்சியை ஆரம்பிக்கவுள்ளன. இதன் ஒளிப்பரப்பு ஆகஸ்டு மாதம் 15ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் ராஜ் டிவி நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், இன்று அண்ணா அறிவாலயத்தில் நடக்கவிருக்கும் விழாவில், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைகிறார். அவருடன் 1,000 பேரும் இணைகின்றனர் என ராஜ் டிவி சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications