For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐசிசி தர வரிசை-4வது இடத்தில் டோணி

By Staff
Google Oneindia Tamil News

துபாய்: ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தர வரிசை பட்டியலில் இந்திய விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான மகேந்திர சிங் டோணி 4வது இடத்தில் உள்ளார்.

முதலிடத்தில் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் உள்ளார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2வது இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் ஹூசே 3வது இடத்திலும் உள்ளனர்.

Dhoni

தற்போது 4வது இடத்தில் உள்ள டோணி நாளை தொடங்க இருக்கும் ஆப்ரோ-ஆசிய கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடினால் முன்றாவது இடத்திற்கு முன்னோறும் வாய்ப்பு உள்ளது.

அதேபோல இந்திய அணியின் கேப்டன் டிராவிட் 17வது இடத்தில் உள்ளார். போட்டிங்கில் டாப் 20 பட்டியலில் இந்திய வீரர்கள் டோணி, டிராவிட்டை தவிர வேறு எந்த ஒரு வீரரும் இடம் பெறவில்லை. தெண்டுல்கள் எல்லாம் ஆளையே காணவில்லை.

பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷான் போலக் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் பிரேக்கன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 3வது இடத்தில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் உள்ளார்.

இந்திய வீரர் ஹர்பஜன் சிங் 13வது இடத்திலும், அகார்கர் 16வது இடத்திலும் உள்ளனர். மற்ற இந்திய வீரர்கள் யாரும் டாப் 20 வீரர்களில் இல்லை.

ஆல்ரவுண்டர் பட்டியிலில் தென் ஆப்பிரிக்க வீரர் ஷேன் போலக் முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை தென் ஆப்பிரிக்க வீரர் காலீஸ் பிடித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கெயில் 3வது இடத்தில் உள்ளார்.

ஆல்ரவுண்டர் பட்டியலில் டாப் 5 வீரர்களில் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X