சுனிதாவுடன் சுற்றி வரும் விண்வெளி நிலையம்:இன்று இரவு சென்னை, காஞ்சியில் காணலாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சுனிதா வில்லியம்ஸுடன் விண்ணில் நிலை கொண்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று இரவு சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1998ம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையம் உருவாக்கப்பட்டது. பூமியிலிருந்து 350 கிலோமீட்டர் உயரத்தில் இந்த விண்வெளி நிலையம் உள்ளது. தினசரி 14 முறை இந்த விண்வெளி நிலையம் பூமியை சுற்றி வருகிறது.சர்வதேச விண்வெளி நிலையம் எப்போதாவது பூமிக்கு மிக அருகே வரும். அந்த வகையில் இன்று இரவு பூமிக்கு அருகே சர்வதேச விண்வெளி நிலையம் வருகிறது. இதை சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும்.
மாலை 6.19 முதல் இரவு 7.27 வரை இதைக் காணலாம். சென்னையில் உள்ளவர்கள் இரவு 7.20 மணிக்குக் காண முடியும். தென் மேற்கு திசையிலிருந்து வட கிழக்கு திசையை நோக்கி சிறிய ஒளியுடன் சர்வதேச விண்வெளி நிலையம் நகர்ந்து செல்வதைக் காணலாம்.












Click it and Unblock the Notifications