அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ பயோ-டேட்டா
மதுரை:மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்லூர் கே.ராஜூவின் பயோ-டேட்டா.
ராஜூவின் தந்தை பெயர் காமாட்சி தேவர், தாயார் ஒச்சம்மாள், மனைவி ஜெயந்தி. இவருக்கு ரம்யா, செளமியா என்ற இரண்டு மகள்களும், தமிழ்மணி என்ற மகனும் உள்ளனர்.
![]() |
பிஎஸ்சி பட்டதாரியான ராஜு முக்குலத்தோர் பிரிவில் பிரமலைக்கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர். (சசிகலாவும் இந்த வகுப்பை சேர்ந்தவரே). இளம் வயதிலிருந்தே தீவிர எம்ஜிஆர் விசிறி. அதிமுக தொண்டர்.
முதலில் மதுரை 16வது வட்ட அதிமுக செயலாளரானார். 1996-2001ம் ஆண்டில் மதுரை மாநகராட்சி கவுன்சிலராகி எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
![]() |
2001ம் ஆண்டு நடைபெற்ற மேயர் தேர்தலில் செ.ராமச்சந்திரனை (திமுக) எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதிமுக நகர் மாவட்டச் செயலாளராக இருமுறை பதவி வகித்துள்ளார்.
அதிமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் நடைபெற்ற அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றவர். கடந்த சட்டசபை தேர்தலின் போதும் மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார்.
ஆனால் எஸ்வி சண்முகத்திற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்ற சண்முகம் மதுரையில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று திமுக அரசுக்கு ஆதரவாக மாறினார். இதனால் அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்து கட்சி பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் உடல் நலக் குறைவால் திடீரொன கடந்த பிப்ரவரி மாதம் மரணமடைந்தார். இதையடுத்து இப்பகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு மனுதாக்கல் நடைபெற்று வருகிறது.
இப்போது வேட்பாளராக ராஜூ அறிவிக்கப்பட்டுள்ளார். மேற்கு தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். தொகுதி சார்பான பல்வேறு பொதுப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல போராட்டங்களில் பங்கேற்றவர்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜூ,
மதுரை மேற்குத் தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், நெசவாளர்கள் பிரச்சனை, போக்குவரத்துப் பிரச்சனைக்கு தீர்வு காணவும் தொடந்து முயற்சிகள் மேற்கொள்வேன். இப்பகுதியில் இனி வெள்ள நீர் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்றார்.
பின்னர் ஜெயலலிதாவையும் சந்தித்து தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்














Click it and Unblock the Notifications