அதிமுகவுக்கு தேவர் மக்கள் இயக்கம் ஆதரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை மேற்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுகவை ஆதரிக்கப் போவதாக பசும்பொன் தேவர் மக்கள் இயக்கத்தின் தலைவர் வெள்ளைச்சாமித் தேவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 26ம் தேதி நடைபெறவுள்ள மதுரை மேற்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுகவை ஆதரிப்பதாக தீர்மானித்துள்ளோம்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில், அதிமுகவை தவிர வேறு யாரையும் ஆதரிக்க எங்களுக்கு எண்ணம் இல்லை.

ஆளும் திமுக அரசு, மறைந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அவர் பிறந்த பசும்பொன் கிராமத்தில், நூற்றாண்டு விழா மணிமண்டபம் கட்டுவதற்கு ரூ.5 கோடி ஒதுக்குவதாக கூறியிருந்தது. ஆனால் இது வரை அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை.

எனவே தமிழக அரசு, தேவர் நினைவு மண்டபம் கட்டுவதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+