விம்பிள்டன்: 2வது சுற்றில் சானியா
Subscribe to Oneindia Tamil
லண்டன்:விம்பிள்டன் டென்னிஸின் மகளிர் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்றுக்கு முனனேறியுள்ளார் இந்தியாவின் சானியா மிர்ஸா.
![]() |
டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலேயே அதிக பெருமைக்குரியதாக கருதப்படுவது விம்பிள்டன் போட்டிகள். இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் போட்டிகள் தொடங்கியுள்ளன.
மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா, ரஷ்ய வீராங்கனை யரோஸ்லாவை எதிர்த்து மோதினார். இந்தப் போட்டியில் அபாரமாக ஆடிய சானியா, 6-0,6-3 என்ற நேர் செட்களில் யரோஸ்லாவை தோற்கடித்து 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
அடுத்த போட்டியில் முன்னணி வீராங்கனையான ரஷியாவின் நாடியா பெட்ரோவாவுடன் விளையாடுகிறார். இந்தப் போட்டியில் வென்றால் சானியாவுக்கு ஒரு புதுப் பெருமை கிடைக்கும். அதாவது, அவர் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 2வது சுற்றுக்கு மேல் சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications