நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் கோலாகலம்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இன்று ஆனித் தேரரோட்டம் மிகச் றப்பாக நடைபெற்றது.
இந்தத் திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 21ம் தேதி ஆரம்பமானது. தினமும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் விஷேச அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன.
![]() |
திருவிழாவின் 9ம் நாளான இன்று 8 மணிக்கு தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மாலை தேர் நிலைக்கு வந்ததும் காந்திமதி அம்மன் தேர் வீதியுலா நடைபெறும். அதை தொடர்ந்து சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும்.
திருவிழாவையொட்டி திருநெல்வேலியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. நெல்லை டவுன் வீதிகளுக்குள் பேருந்துகள் அனுமதிக்கப்படாமல் மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications