ஷரபோவாவிடம் சானியா மிர்ஸா தோல்வி
சாண்டியாகோ:அமெரிக்காவின் சாண்டியாகோ நகரில் நடந்து வரும் அக்யூரா கிளாசிக் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றில் உலகின் நம்பர் டூ வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவாவிடம் இந்தியாவின் சானியா மிர்ஸா தோல்வி அடைந்துவிட்டார்.
அமெரிக்க டென்னிஸ் அரங்கைக் கலக்கி வரும் சானியா அக்யூரா கிளாசிக் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்தார்.கடந்த 15 நாட்களாக அடுத்தடுத்து வெற்றிகளைச் சுவைத்து வரும் சானியா, அக்யூரா டென்னிஸ் போட்டியின் 3வது சுற்றுப் போட்டியில், ரஷ்யாவின் டினாரா சபீனாவை 6-1, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சபீனாவுக்கு அதிர்ச்சி அளித்தார். உலக அளவில் 14வது இடத்தில் இருப்பவர் சபீனா. சானியாவோ 31வது இடத்தில்தான் உள்ளார்.
இதையடுத்து காலிறுதிப் போட்டிக்கு முன்னேறிய சானியா உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை இன்று சந்தித்தார்.
ஆனால், போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே மரியாவின் கையே ஓங்கியிருந்தது. சானியாவை 6-2, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வென்ற ஷரபோவா அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்டார்.
இதுவரை இருவரும் 2 போட்டிகளில் தான் நேருக்கு நேராக மோதியுள்ளனர். கடந்த 2005ம் ஆண்டு இதே அக்யூரா டென்னிஸ் போட்டியின் நான்காவது சுற்றில் இருவரும் சந்தித்தனர். அந்த போட்டியிலும் ஷரபோவா தான் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் சானியா வெற்றி பெற்றிருந்தால் உலகத்தர வரிசையில் பல படிகள் முன்னேறியிருப்பார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications