For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விளம்பரங்களற்ற மாநகரங்கள்: அரசு திடீர்முடிவு பின்னணி- ஸ்பெஷல் ரிப்போர்ட்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:நேற்று முன் தினம் முதல்வர் கருணாநிதி தலைமையில் உயர் மட்டக் கூட்டம் சென்னையில் நடந்தது. அதில் தமிழகத்தின் ஆறு மாநகராட்சிகளிலும் விளம்பர போர்டுகளுக்குத் தடை விதிக்கவும், இதன் மூலம் இந்த ஆறு நகரங்களையும் விளம்பர போர்டுகளற்ற நகரங்களாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டது.

இதன் பின்னணியில் கொஞ்சம் விவகாரமானது.

தாம்பரத்தைத் தாண்டி சென்னைக்குள் நுழைபவர்கள் கண்களில் முதலில் படுவது ஊர் அல்ல, பெரிய பெரிய விளம்பர போர்டுகள்தான். அந்த அளவுக்கு விமான நிலையத்தில் தொடங்கி சென்னை நகரின் பிரதான சாலைகள், வணிக வளாகங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் மெகா சைஸில் காணப்படும் இந்த விளம்பர போர்டுகளின் பின்னணியில் மகா பெரிய மனிதர் ஒருவர் மறைந்திருக்கிறார்.

சென்னை நகரின் பெரும்பாலான விளம்ப போர்டுகளை வைத்திருப்பது அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராஜனுக்குச் சொந்தமான செவன் ஸ்டார் நிறுவனம்தான்.

இந்த நிறுவனத்தைத் தாண்டி ஒரு விளம்பர நிறுவனம் செயல்படுவது என்பது சென்னையில் சத்தியமாக சாத்தியமில்லாத விஷயம். அந்த அளவுக்கு தேவராஜனின் நிறுவனம் படு பவர் ஃபுல்லானது.

சென்னையில் மட்டுமல்லாது தமிழகத்தின் முக்கிய நகரங்களான கோைவ, மதுரை, திருச்சி, சேலம் என பெரும் நகரங்கள் அனைத்திலும் கூட தேவராஜனின் திருக்கரங்கள்தான் நீண்டுள்ளன.

இதுதவிர பெங்களூரில் உள்ள பிரபலமான செல்வெல் குரூப்புடன் இணைந்து செவன் ஸ்டார் நிறுவனம் கர்நாடகத்திலும் தனது கிளை பரப்பியுள்ளது.

தேவராஜனின் செல்வாக்கு மிகப் ெபரியது. இந்தியாவின் பல முன்னணி நகரங்களில் இவரது விளம்பர போர்டுகள் பளிச்சிடுவதைக் காணலாம். எந்த மாநிலமாக இருந்தாலும், அதில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தேவராஜனின் செல்வாக்குதான் அங்கு கொடி கட்டிப் பறக்கும்.

கடந்த அதிமுக ஆட்சியிலும் கூட தேவராஜனை பல வழிகளிலும் மடக்கி உள்ளே தள்ள ஜெயலலிதா கடுமையாக முயன்றார். ஆற்காடு வீராசாமியின் வீட்டிலும் கூட லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால், வெறும் மருந்து மாத்திரை பில்கள் தான் சிக்கின.தனது திறமையால் ஜெயலலிதாவை சமாளித்து தப்பிவிட்டார் தேவராஜன்.

தேவராஜனால் சென்னை மாநகராட்சி அடைந்துள்ள நஷ்டத்தைக் கணக்குப் போட்டுப் பார்த்தால் தலை சுற்றி விழுந்து விடுவார்கள் என்கிறார்கள். அந்த அளவுக்கு வருவாயை வாரி அள்ளியுள்ளாராம் தேவராஜன்.

இதைக் கருத்தில் கொண்டுதான் நடிகர் சரத்குமார் கூட, சமீபத்தில், அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்துவதை விட இதுேபான்ற முறையான அனுமதி பெறாத விளம்பர போர்டுகளை அகற்ற முன்வர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையே தான் இப்போது ராமதாசும் கையில் எடுத்துள்ளார்.

அதே போல கலைஞர் டிவியை உருவாக்குவதில் மிகுந்த தீவிரம் காட்டி வரும் ஆற்காடுக்கு எதிராக சன் டிவியும் கூட களமிறங்கியுள்ளது. விளம்பர போர்டுகள் தொடர்பாக வரும் எதிர் கருத்துக்களுக்கு சன் டிவி முக்கியத்துவம் அளிக்க ஆரம்பித்துள்ளது.

இதை கவுண்டர் செய்தால் ஆற்காடுக்கும் திமுகவுக்கும் நிச்சயம் கெட்ட பெயர் உருவாகும் என்ற சூழலில் தான் தேவராஜனுக்கு இல்லாதது யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் ஒட்டு மொத்தமாக விளம்பர போர்டுகளுக்கே தடை போட முடிவு செய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X