மயிரிழையில் உயிர் தப்பிய நாகப்பட்டிணம் எம்எல்ஏ
Subscribe to Oneindia Tamil
திருவாருர்: திருவாருர் அருகே நடந்த சாலை விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பினார் நாகப்பட்டிணம் இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து.
மாரிமுத்து காரில் திரூவாருர் சென்று கொண்டிருந்தார். கிடாரங்கொண்டான் அருகே முன்னால் சென்ற அரசுப் பேருந்து திடீரென பிரேக் போட்டதால் எம்எல்ஏவின் கார் நிலை தடுமாறி அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது.
இதில் கார் அப்பளமாக நொறுங்கியது. இந்த விபத்தில் எம்எல்ஏ மாரிமுத்து, டிரைவர் ஜனார்த்தனன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக திருவாருர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications