மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்ளுக்கு முன்பு மேட்டூர் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்ததால், அணை இந்த ஆண்டில் நான்காவது முறையாக தனது முழுக் கொள்ளளவை எட்டியது.
அதன் பின்னர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது. இதனால் அணையின் நீர் இருப்பு படிப்படியாக குறைய ஆரம்பித்தது.
இந்த நிலையில், ஓரிரு நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில், மழை பெய்து வருவதால் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
இன்று பிற்பகல் நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 27 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 120.24 அடியாக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 24 ஆயிரத்து 500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.












Click it and Unblock the Notifications