அதிமுக - பாஜக கூட்டணி வருமா?br/வரலாம் என்கிறார் இல.கணேசன்!
திருநெல்வேலி:
எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, கம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் கட்சியைத் தவிர பிற கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
நெல்லையில் இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் ஆட்சியில் கம்யூனிஸ்ட் கட்சிகள்தான் நல்ல நிலையில் உள்ளனர். லோக்சபாவுக்கு எப்போது தேர்தல் வந்தாலும் பாஜக தான் ஆட்சியை பிடிக்கும்.
லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படவில்லை.
பாஜகவின் அகில இந்திய பார்வையாளர் ரவிசங்கர் பிரசாத் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தது நட்புணர்வு காரணமாக நடந்தது.
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரும். இது தேசிய அளவில் மட்டுமின்றி மாநில அளவிலும் பல மாற்றத்தை ஏற்படுத்தலாம். திமுக, காங், கம்யூ தவிர பிற கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது.
வரும் 12ம் தேதி ராமர் பால பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படுகிறது. ராமர் பாலம் இடிப்பதை தடுக்க கோரி 19ம் தேதி மாநாடும், 18ம் தேதி நெல்லையில் செயற்குழுவும், 19ம் தேதி பொதுகுழுவும் நடைபெறுகிறது. பாளை வ.உ.சி மைதானத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் 19ம் தேதி அத்வானி கலந்து கொள்கிறார் என்றார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications