சந்திரிகா திடீர் சென்னை வருகை
சென்னை:
இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா 2 நாள் பயணமாக இன்று காலை சென்னைக்கு வந்தார்.
தனிப்பட்ட முறையில் சந்திரிகா இந்தியா வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் சென்னையில் தங்கும் சந்திரிகா, தனது சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 13ம் தேதி டெல்லி செல்கிறார்.
சந்திரிகா வருகையையொட்டி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விமான நிலையத்திற்கு வெளியே வந்த சந்திரிகாவை சந்திக்க செய்தியாளர்கள் விரைந்தனர். ஆனால் அவர்களிடமிருந்து தப்பி தயாராக நின்ற காரில் ஏறிப் பறந்து விட்டார் சந்திரிகா.
முன்னதாக சந்திரிகா வருவதற்கு முன்பு விமான நிலையத்தில் இரண்டு இலங்கைப் பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இரு பெண்களும் சந்திரிகாவை பேட்டி காண வந்திருந்த செய்தியாளர்களிடம் போய் சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்து குழப்பமடைந்த போலீஸார் விரைந்து வந்து அந்தப் பெண்களிடம் என்ன என்று கேட்டனர். அதற்கு அவர்கள் இருவரும், நாங்கள் சில நாட்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்தோம். ஆனால் இங்கு வந்த போது எங்களது சூட்கேஸ்களைக் காணவில்லை. இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் புகார் கூறிக் கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.
இதைக் கேட்டு கடுப்பான கியூ பிரிவு போலீஸார், சூட்கேஸ் காணாமல் போனால் உரிய அதிகாரிகளிடம் போய் புகார் கூற வேண்டும். இப்படியெல்லாம் பத்திரிக்கையாளர்களிடம் புகார் கூறக் கூடாது என்று கூறி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த இரு பெண்களால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications