• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லியாகத் அலியின் மன்மத லீலைகள்: பிரகாஷையும் மிஞ்சிய காமக் கொடூரன்

By Staff
|

சென்னை:

திருமண இணையத் தளங்களில் பல்வேறு போலிப் பெயர்களில் விளம்பரம் செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் உடல் ரீதியாகவும், பண ரீதியாகவும் பெரும் மோசடி செய்து, 30க்கும் மேற்பட்ட பெண்களை மணந்து, பல பெண்களை வைத்து ஆபாசப் படம் எடுத்து, செக்ஸ் டாக்டர் பிரகாஷையும் மிஞ்சும் அளவுக்கு, செக்ஸ் மோசடியில் புதிய வரலாறு படைத்துள்ளார் லியாகத் அலிகான்.

Liyagathali Liyagathali
Liyagathali Video of pair found in Liakath Ali's laptop
பார்ப்பதற்கு, இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற ரேஞ்சுக்கு படு சாந்தமாக, குள்ளமாக, அப்பாவித்தனமான ஒரு தோற்றத்துடன் இருக்கிறார் லியாகத் அலிகான். ஆனால் இவர் செய்துள்ள செய்கைகளைப் பார்த்தால், தலை சுற்றி கிறுகிறுத்துப் போய் விடும்.

இவர் இப்படிச் செய்திருப்பாரா என்ற ஆச்சரியமும், குழப்பமும் ஏற்படும். ஆனால் லியாகத் அலிகானின் மோசடிகளுக்கு குவியல் குவியலாக ஆதாரங்கள் சிக்கியுள்ளன. அதில் பல பெண்களுடன் லியாகத் குஜாலில் ஈடுபட்ட வீடியோக்களும் அடக்கம்.

இதை வைத்துத்தான் லியாகத் அலிகானை சென்னை போலீஸார் வலுவாக பிடித்துள்ளனர்.

லியாகத் அலிகானின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் நெய்வேலி. வயது 34. இவரது மனைவி சபரியா சபனா. ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் கூத்தம்பாக்கத்தில் உள்ள விஜயலட்சுமி நகரில் வசித்து வருகின்றனர்.

லியாகத் அலிகான் முதலில் பிரச்சினையில் சிக்கியது திருச்சியில்தான். ஆரம்பத்தில் நெய்வேலியில் இணையள மையத்தை நடத்தி வந்தார் லியாகத் அலிகான். ஆனால் அதில் நஷ்டம் ஏற்படவே, சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சிக்கு இடம் பெயர்ந்தார்.

தனது மையத்திற்கு வரும் பெண்களை, குறிப்பாக மாணவிகளுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வார். இந்த நட்பு பின்னர் வேறு உறவு வரை கொண்டு போய் விடும்.

அந்த சமயத்தில் அதை வெப் கேம் மூலம் படம் எடுத்து வைத்துக் கொண்டு அதைக் காட்டி அவர்களை மறுபடியும் மறுபடியும் உறவுக்கு அழைப்பார். இவற்றை வீடியோவிலும் பதிவு செய்து சிடி போட்டு விற்று விடுவார்.

லியாகத் அலிகானின் இந்த அசிங்கமான சிடிக்கள் வெளியில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து திருச்சி போலீஸார் இவரைக் கைது செய்தனர். ஆனால் சில மாதங்களிலேயே வெளியே வந்து விட்டார் லியாகத் அலிகான்.

வெளியில் வந்த அவர் தனது தொழிலில் சின்ன மாற்றம் செய்து புத்துணர்ச்சியோடு புதுக் களத்தில் குதித்தார். இன்டர்நெட் மூலம் பெண்களை வலை விரித்துப் பிடிக்க ஆரம்பித்தார்.

குறிப்பிட்ட திருமண இணையதளத்தைக் குறி வைத்த லியாகத் அதில் பல்வேறு பெயர்களில், பல்வேறு கெட்டப்களில் தனது விளம்பரத்தைக் கொடுத்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரி, சாப்ட்வேர் என்ஜீனியர், காவல்துறை அதிகாரி என்று பலவிதமான போலியான தகவல்களுடன் அவரது விளம்பரங்கள் இடம் பெற்றன.

வெளிநாட்டு வேலை பார்க்கும் மாப்பிள்ளை, நல்ல அந்தஸ்தில் உள்ள மாப்பிள்ளை, நல்ல வசதியுடன் கூடிய மாப்பிள்ளை என்று தேடித் தேடிப் பார்க்கும் பெண்களுக்கு லியாகத் அலிகானின் விளம்பரங்கள் வெகுவாக கவர்ந்தன.

இந்த விளம்பரங்களைப் பார்த்து ஏராளமான பெண்கள், குறிப்பாக சாப்ட்வேர் என்ஜீனியர்கள் மயங்கியுள்ளனர். குடும்பத்தினர் மூலமாகவும், தனியாகவும் இவர்கள் லியாகத்தை அணுகியுள்ளனர்.

தான் விரித்த வலையில் ஏகப்பட்ட பெண்கள் விழ ஆரம்பித்ததைப் பார்த்த லியாகத் அலிகான், திட்டமிட்டு படிப்படியாக காய் நகர்த்தினார்.

முதலில் தனியாக விண்ணப்பித்த பெண்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வார். அவர்களுடன் சாட்டிங் மூலம் முதலில் பேச்சுவார்த்தை நடத்துவார். தான் அமெரிக்காவில் இருப்பதாகவும், லண்டனில் வசிப்பதாகவும் அள்ளி விடுவார்.

பெரும் கோடீஸ்வரரான தனக்கு பாரம்பரியம் மிக்க இந்தியப் பெண்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும். எனக்கு வரதட்சணை தேவையில்லை, அன்பு காட்டத் தெரிந்த பெண் தேவை. எனது உயரத்திற்கேற்ற பெண் தேவை, உயரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று விதம் விதமாக கலர் காட்டி சாட்டிங்கில் அசத்துவார்.

இவரது பேச்சை நம்பி தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலிருந்து மட்டுமல்லாது, பெங்களூர், மும்பை, ஹைதராபாத், நாக்பூர் என வெளி மாநிலங்களிலிருந்தும் நிறையப் பேர் சிக்கியுள்ளனர்.

தனக்கேற்ற பெண் என்று செலக்ட் செய்யும் பெண்களிடம் தான் இந்தியா வந்துள்ளதாகக் கூறி நேரில் வரவழைத்து பேசுவார் லியாகத் அலிகான். பின்னர் பார்ட்டிகளுக்குக் கூட்டிச் செல்வார், ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்வார்.

இவரிடம் 37 பெண்கள் சிக்கியுள்ளது ஆதாரப்பூர்வமாக போலீஸாருக்குத் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் கல்யாணம் செய்து கொள்வதாக வாக்களித்துள்ளார். இதையடுத்து விசா எடுக்க, அந்த செலவு, இந்த செலவு என லட்சக்கணக்கில் பணத்தை வாங்கியுள்ளார்.

இந்தப் பணத்தை ஒரு பெண்ணின் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளார். அந்தப் பெண் தனது சகோதரி என்று கூறியுள்ளார். ஆனால் அந்த பெண்ணும் கூட, லியாகத்தின் வலையில் விழுந்த ஒரு பெண்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், பெயருக்கு நிச்சயதார்த்தமும் செய்து ெகாண்டுள்ளார்.

அடுத்து தனது திருவிளையாடலின் அடுத்த கட்டத்தை ஆரம்பித்துள்ளார். நிச்சயதார்த்தம் முடிந்ததும், இவர் நம் கணவர் என்ற எண்ணத்திற்கு பாவப்பட்ட அந்தப் பெண்கள் வந்துள்ளனர். இதை பயன்படுத்திக் கொண்டு அவர்களை தனித் தனியாக, அதாவது வாரத்திற்கு ஒரு பெண் என கொடைக்கானல், ஊட்டிக்கு கூட்டிச் சென்றுள்ளார்.

அங்கு கல்யாணத்திற்கு முன்பு ஒத்திகை பார்க்கலாம் என்று கூறி உடலுறவு வைத்துள்ளார். இதை அந்தப் பெண்களுக்குத் தெரியாமல் வீடியோவிலும் பதிவு செய்துள்ளார். உறவு கொள்வதை மட்டும் எடுக்காமல் குளிப்பதையும் கூட படம் எடுத்துள்ளார்.

பின்னர் இதை அந்தப் பெண்களிடம் சொல்லி அதிர்ச்சியூட்டியுள்ளார். இதை வெளியில் விடாமல் இருக்க வேண்டுமானால் பணம் தேவை என்று கூறி மிரட்டி பணம் பறித்துள்ளார். வெளியில் தெரிந்தால் அசிங்கமாச்சே என்று அந்தப் பெண்களும் பணத்தைக் கொடுத்து விட்டு கப்சிப் ஆகியுள்ளனர்.

சமீப காலமாக கேரளத்துப் பெண்கள் மீது லியாகத்துக்கு மோகம் பிறந்துள்ளது. இதற்கு வசதியாக நாகர்கோவில் அருகே உள்ள மார்த்தாண்டத்தில் முகாமிட்டார். அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கிருந்தபடி கேரளப் பெண்களுக்கு வலை வீசினார்.

அவரது வலையில் 7 பெண்கள் சிக்கியிருந்தனர். அவர்களை வீழ்த்த நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் போலீஸில் சிக்கி விட்டார்.

கார் டிரைவர் உடந்தை

லியாகத்தின் அத்தனை லீலைகளும் அவரிடம் கார் டிரைவராக இருந்த சேகருக்கு முழுமையாக தெரியுமாம். லியாகத் சிக்கியதைத் தொடர்ந்து சேகர் தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க போலீசார் வலை வீசியுள்ளனர்.

லியாகத் அலிகான் பெண் பார்க்கப் போகும் அழகே தனி. அவரும் சேகரும் மட்டும்தான் பெண் பார்க்கப் ேபாவார்கள். விலை உயர்ந்த காரில் பெண் வீட்டுக்குப் போய் நிற்பார்கள்.

தொழில் விஷயமாக மும்பைக்கு வந்தேன், பெங்களூர் வந்தேன், ஹைதராபாத் வந்தேன். அடுத்து லண்டன் போக வேண்டும். அம்மா வெளிநாட்டில் இருக்கிறார் என்று அளந்து விடுவாராம் லியாகத்.

இப்படிப் பெண் பார்த்து விட்டு வந்த பிறகு அந்தப் பெண்களுடன் தனியாக பேசி பிராக்கெட் போட்டு வலையில் வீழ்த்துவது லியாகத்தின் ஸ்டைல்.

லியாகத்தின் லீலைகளுக்கு சாட்சியாக ஏராளமான ஆபாச சிடிக்கள் போலீஸில் சிக்கியுள்ளன. அதில் வரும் காட்சிகளைப் பார்த்தால் செக்ஸ் டாக்டர் பிரகாஷை விட இவர் மிக மோசமான ஆளாக இருப்பார் எனத் தெரிகிறது என்கிறார்கள் போலீசார்.

ஒரு வட மாநிலப் பெண்ணுக்கு போதை மருந்துக் கொடுத்து படுக்கை அறையில் தள்ளி உடலுறவு கொண்டுள்ளார். இதை வீடியோவில் எடுத்துள்ளார்.

இதேபோல, சில பள்ளி மாணவிகளின் ஆபாசப் படங்கள் லியாகத்தின் லேப் டாப் கம்ப்யூட்டரில் சிக்கியுள்ளன.

வேறு சிலரையும் வைத்து ஆபாச படம்:

இந்த சிடியில் ஏராளமான பெண்களுடன் உடலறவு கொள்வது போன்ற படங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றில் லியாகத் அலிதான் உள்ளார். மேலும் வேறு சிலரையும் வைத்து ஆபாசப் படமாகவும் எடுத்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த ஒரு பணக்காரப் பெண்ணையும் தனது வலையில் வீழ்த்தியுள்ளார் லியாகத். சந்தீப் என்ற பெயரைச் சொல்லி அந்தப் பெண்ணின் வீட்டாரை வீழ்த்தியுள்ளார்.

அவர்களிடம், தான் லண்டனில் தொழிலதிபராக இருப்பதாகவும், பெண்ணைப் பிடித்து விட்டதாகவும், விரைவில் கியூபா செல்லவுள்ளதாகவும், ஆறு மாதத்தில் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்றும் அளந்துள்ளார்.

அதற்கு அந்த அப்பாவிப் பெற்றோர் இப்போதே நிச்சயம் செய்து விடலாமே என்று கூறியுள்ளனர். இதையடுத்து குங்குமத்தை எடுத்து பெண்ணின் நெற்றியில் வைத்து அவர்களை உருக வைத்துள்ளார்.

இந்த நிலையில்தான் போலீஸில் சிக்கி விட்டார். அப்போது அந்தப் பெண்ணிடமிருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது. ஏன் நான்கு நாட்களாக பேசவில்லை என்று அந்தப் பெண் கேட்க, போலீஸார் உண்மையைக் கூறி அந்தப் பெண்ணை தெளிவுபடுத்தினராம்.

சென்னையில் மட்டும் 7 பெண்களை மோசடி செய்துள்ளார் லியாகத். ஒரு விதவைப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ. 40,000 பணத்தைப் பறித்துள்ளார். மேலும் 2 பெண்களைக் கல்யாணம் செய்து கொள்வதாக கூறி பணம் பறித்துள்ளார்.

நெல்லையைச் சேர்ந்த ஒரு வயதான பெண்ணிடமும் சாட்டிங் மூலம் செக்ஸ் குறித்துப் பேசி அந்தப் பெண்ணின் மனதைக் கெடுத்துள்ளார் லியாகத். அவருடனும் உறவு வைத்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு பேரன், பேத்தியெல்லாம் இருக்கிறார்களாம்.

லியாகத் குறித்து சமீபத்தில்தான் சென்னை காவல்துறை இணை ஆணையர் ரவிக்குப் புகார் வந்தது. ஒரு எஸ்.எம்.எஸ். மூலம்தான் புகார் வந்தது. ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி தன்னை மோசடி செய்து விட்டதாகவும், தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும் அந்தப் புகார் கூறியது.

இதையடுத்து போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கினர். லியாகத் அலிகானின் செல்போன் தொடர்புகளைக் கண்காணிக்க ஆரம்பித்தனர். அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் பின்னாலேயே துரத்தினர்.

அவரது செல்போனில் பேசிய பெண்களையும் போலீஸார் விசாரித்தனர். அவர்களில் சிலர் உண்மையை போட்டு உடைத்துள்ளனர். இதுதான் போலீஸாருக்கு வசதியாகப் போய் விட்டது.

இதையடுத்து மார்த்தாண்டத்தில் மன்மதன் லியாகத் முகாமிட்டிருப்பதை அறிந்து நைச்சியமாக பேசி சென்னைக்கு வரவழைத்து வளைத்துப் பிடித்தனர் போலீஸார்.

லியாகத் அலிகானின் லேப்டாப்பில் இருந்து சில காட்சிகள்தான் பிடிபட்டுள்ளன. பெரும்பாலானவற்றை அவர் அழித்து விட்டார்.

லியாகத் அலிகானை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும், அவரது டிரைவரை பிடிக்கவும் போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more