அந்தமானின் திமுக-பாஜக கூட்டணி!
போர்ட் பிளேர்
அந்தமானின் போர்ட் பிளேர் நகராட்சிக்கு நடந்த தேர்தலில் பாஜக ஆதரவு பெற்ற தமிழ் வேட்பாளரான ஆர்.தாமோதரன் வெற்றி பெற்று நகராட்சித் தலைவரானார்.
போர்ட் பிளேர் நகராட்சியில் மொத்தம் 18 தேர்வு பெற்ற கவுன்சிலர்களும், 3 நியமன கவுன்சிலர்களும் உள்ளனர். இந்த நகராட்சியின் தலைவர் பதவிக்கு பாஜக ஆதரவுடன் ஆர்.தாமோதரன் போட்டியிட்டார்.
அவரது பெயரை திமுக கவுன்சிலர் ராஜா மருதவாணன் முன்மொழிந்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனால் தாமோதரன் போட்டியின்றி வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற தாமோதரன் கூறுகையில் போர்ட் பிளேர் மக்களின் உயர்வுக்காக பாடுபடுவேன். போர்ட் பிளேர் நகராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க வகை செய்வேன் என்றார்.
பின்னர் பாஜக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஷால் ஜாலி மற்றும் தாமோதரன் ஆகியோர் நகரின் முக்கியப் பகுதிகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
போர்ட் பிளேரில் திமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதாதளமும் இணைந்துள்ளது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications