தமிழக அரசுக்கு காங்கிரஸ் எம்எல்ஏ எதிர்ப்பு!
சேரமான்தேவி:
தமிழக அரசு அறிவித்துள்ள சேரமான் தேவி கால்வாய் திட்டத்திற்கு காங்கிரஸ் எம்எல்ஏ கடும் எதிர்ப்பு தெரிவி்துள்ளார்
இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ வேல்துரை கூறியதாவது,
தமிழக அரசு அமைக்கவுள்ள கன்னடியான் கால்வாய் திட்டம் விவசாயிகளை நேரடியாக பாதிக்கும். இதற்கு மாற்று திட்டமாக மணிமுத்தாறு பிரதான கால்வாயிலிருந்து ராதாபுரம் சாத்தான்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர முடியும்.
ஏற்கனவே மழை காலங்களில் பாபநாசம் சேர்வலாறு அணையில் நிரம்பி வெளியில் செல்லும் உபரி நீரை தேக்கி சுரங்கம் மூலம் மணிமுத்தாறு அணைக்கு கொண்டுவர அரசு திட்டம் தீட்டி இருக்கின்றது.
எனவே அத்திட்டத்தின் மூலம் ராதாபுரம் சாத்தான்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு பதில் எங்கள் தொகுதி மக்கள் வயிற்றில் அடிக்க அரசு முயல்கின்றது. உயிரே போனாலும் கன்னடியன் கால்வாய் தண்ணீரை சாத்தான்குளம் ராதாபுரம் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளார்.
இதனால் இப்பகுதியில் உள்ள திமுகவினருக்கும், காங்கிரஸ் கட்சியியை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.