நெல்லையில் போட்டி போட்டு கருணாநிதி-வேதாந்தி உருவ பொம்மைகள் எரிப்பு
திருநெல்வேலி:
திமுகவினரும் இந்து அமைப்பினரும் போட்டி போட்டுக் கொண்டு தலைவர்களின் உருவ பொம்மைகளை எரித்தனர்.
ராமர் பாலம் குறித்து முதல்வர் தெரிவித்த கருத்துக்கு பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தன.
விசுவ இந்து பரிஷத்தை சேர்ந்த முன்னாள் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ராம்விலாஸ் வேதாந்தி முதல்வரின் தலையையும், நாக்கையும் துண்டிப்போருக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என்று பத்வா வெளியிட்டதாவும் செய்தி வெளியானது.
இந்த பத்வா அறிவிப்பால் திமுகவினர் மத்தியில் கடும் கொத்தளிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நெல்லை சந்தி பிள்ளையார் கோவில் பகுதியில் திமுகவினர் சுமார் 50 பேர் கூடினர். பா.ஜ மற்றும் வேதாந்திக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் ஆட்டோவில் எடுத்து வந்திருந்த வேதாந்தியின் உருவ பொம்மையை எடுத்து நடுரோட்டில் போட்டு தீ வைத்தனர்.
திமுகவினர் கொடும்பாவி எரித்த 1 மணி நேரத்திற்குள் பாஜகவினர் சிலர் டவுன் சொக்கப்பானை அருகே கூடி முதல்வர் கருணாநிதி உருவ பொம்மையை எரித்தனர்.
இதற்கிடையே திமுக தொண்டர்கள் ராம் விலாஸ் வேதாந்தியின் உருவ பொம்மையை மாலைராஜா எம்.எல்.ஏ தலைமையில் நடுரோட்டில் போட்டு தீ வைத்தனர். அவரது உருவ பொம்மையை செருப்பால் அடித்தனர்.
மேலும் வள்ளியூர், அம்பை, பாவூர்சத்திரம், செங்கோட்டை சங்கரன்கோவில் என மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் வேதாந்தியின் உருவ பொம்மையை எரித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications