For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிள்ளையார் சிலையை கொடுத்து பெண்ணை வளைத்த லியாகத்!

By Staff
Google Oneindia Tamil News


சென்னை:

லீலா வினோதங்கள் பல புரிந்த லியாகத் அலிகான், விநாயகர் சிலையைக் கொடுத்து ஒரு பெண் என்ஜீனியரை வளைத்துள்ள விவரம் போலீஸாருக்குத் தெரிந்துள்ளது. அந்தப் பெண் அந்த விநாயகர் சிலையை சென்னை போலீஸாருக்கு அனுப்பி வைத்துள்ளாராம்.

Liyakat alikhan
Click here for more images

பல பொய்களைக் கட்டவிழ்த்து விட்டு, தறி கெட்டுப் போய், இணையதளங்கள் மூலம் எண்ணற்ற பெண்களை மோசடி செய்து பெரும் பணத்தையும், செக்ஸையும் அனுபவித்து தற்போது புழல் சிறையில் அடைபட்டுள்ள லியாகத் அலிகான் குறித்த படிப்படியாக பல திடுக்கிடும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

தான் எத்தனை பேரை ஏமாற்றினோம் என்று கூட லியாகத்துக்குத் தெரியவில்லையாம். அந்த அளவுக்கு தான் செய்த மோசடியின் அளவு கூட தெரியாத அளவுக்கு குண்டக்க மண்டக்க புகுந்து விளையாடியுள்ளாராம் லியாகத் அலிகான்.

லியாகத் அலியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப், செல்போன், டைரி ஆகியவற்றில் உள்ள தொலைபேசி எண்கள், முகவரி ஆகியவற்றின் மூலம் போலீசார் பாதிக்கப்பட்ட பெண்களின் தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.

இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கை கெட்டுவிடக்கூடாது என்பதற்காக அந்த பெண்களின் விவரங்களை போலீசார் ரகசியமாக பாதுகாத்து வருகிறார்களாம்.

லியாகத் அலியின் டைரியில் உள்ள கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தேவி (27) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணைப் பற்றி தகவல் இருந்தது. உடனே போலீசார் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர்.

தேவி, ஓசூரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் இணையதளம் மூலமாக தான் லியாகத்தைத் தொடர்பு கொண்டாராம்.

ஐஐடி படித்து வரும் ராஜேஷ் என்று தன்னைக் கூறிக் கொண்டு பயோ டேட்டாவை அனுப்பி தேவியை கவிழ்த்திருக்கிறார் அலி. தனக்கு ஆன்மீகத்தில் தான் முழு நாட்டம் என்று சொல்லி தேவியை கவர்ந்துள்ளார். இவரின் பேச்சில் சொக்கிப் போன தேவி, லியாகத் அலியின் மீதான காதல் தீவிரமாகி, அவரை உடனே சந்திக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்.

உடனே கிருஷ்ணகிரிக்கு சென்று தேவியை சந்தித்த லியாகத் அலி, ரெடியாக தங்க முலாம் பூசப்பட்ட பிள்ளையார் சிலையை பரிசாக கொடுத்து, இது உனக்கே, உனக்காக அனைத்து கோவில்களின் கருவறையில் வைத்து விஷேசமாக பூஜிக்கப்பட்டது. என்னை விட பத்திரமாக இதை வச்சுக்கோ என்று கூறி தேவியை புளகாங்கிதப்படுத்தியுள்ளார்.

அந்த சந்திப்பை அத்தோடு முடித்துக் கொண்டு தன்னைப் பற்றிய இமேஜை கிரியேட் செய்துள்ளார் அலி. அடுத்த முறை சந்திக்கத் திட்டமிட்டிருந்தபோதுதான் போலீஸில் சிக்கிக் கொண்டார்.

அலி தன்னிடம் கொடுத்த பிள்ளையார் சிலையை போலீஸாரிடம் கொடுத்துள்ளாராம் தேவி. மேலும் அலிக்கு எதிராக கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்லவும் தயார் என கூறியுள்ளாராம்.

போனிலேயே கவிழ்த்த லியாகத்!

தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்களை, போன் மூலம் இரவில் தொடர்பு கொள்வாராம் லியாகத் அலிகான். அவர்களிடம் காதல் மொழி பேசி தன் மீது பைத்தியமாகும்படி செய்து விடுவாராம்.

இரவு எப்படி இருக்கிறது, நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது, இந்த இரவு எனக்கு நரகமாக இருக்கிறது என்று பேசிப் பேசி அந்தப் பெண்களின் மனதில் கிளுகிளுப்பை ஏற்படுத்தி விடுவாராம்.

லியாகத்தின் பேச்சைக் கேட்கும் பெண்களுக்கு மனதுக்குள் பிசையத் தொடங்கி விடுமாம். இதைப் பயன்படுத்தி மெதுவாக காம வலையை விரிப்பார் லியாகத் அலிகான்.

ஆபாசப் படங்கள் குறித்து பேசுவார். அதில் இன்டரஸ்ட் காட்டும் பெண்களிடம், நேரில் வந்தால் நிறையப் படம் காட்டுகிறேன் எனறு கூறி வரவழைத்து ஹோட்டல்களுக்குக் கூட்டிச் சென்று அதுபோன்ற படங்களைக் காட்டி தனது காம இச்சையைத் தீர்த்துக் கொள்வாராம்.

இப்படித்தான் கரூரைச் சேர்ந்த கமலா என்ற சாப்ட்வேர் என்ஜீனியர் லியாகத்தின் காம வலையில் சிக்கி தன்னை இழந்துள்ளார். இவருக்கு ஒரு நாளைக்கு 300 ஆபாச எஸ்.எம்.எஸ். வரை அனுப்பி இருக்கிறாராம்.

லியாகத் அலிகான் விவகாரத்தைத் தோண்ட தோண்ட பல பெண்களின் சீரழிந்த வாழ்க்கைக் கதைகள் வருவதால் போலீஸார் பெரிதும் குழம்பிப் போயுள்ளனராம்.

லியாகத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட வீடியோ சிடிக்களில் சிறுவர் சிறுமியரை வைத்து இவர் எடுத்த ஆபாச படங்களும் சிக்கியுள்ளன.

மேலும் பல பெண்களுடன் ஹோட்டல் அறைகளில் இவர் போட்ட கும்மாளத்தையும் படம் பிடித்து வைத்துள்ளார். அந்த வீடியோக்களும் இப்போது வரிசை கட்டி மெதுவாக வெளியில் வர ஆரம்பித்துள்ளன.

அலிக்கு 4 நாள் போலீஸ் காவல்:

இந் நிலையில்லியாகத் அலிகானை 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு சென்னை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

லியாகத் அலிகானை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை புளியந்தோப்பு போலீஸார், எழும்பூர் 5வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

இதற்காக நேற்று மாலை பலத்த பாதுகாப்புடன் லியாகத் அலிகானை கோர்ட்டுக்கு போலீஸார் கொண்டு வந்தனர். லியாகத் அலியைக் காண பெரும் கூட்டம் கூடியிருந்தது. செய்தியாளர்களும், புகைப்பட நிபுணர்களும் அதிக அளவில் குழுமியிருந்தனர்.

பின்னர் கோர்ட்டில் நீதிபதி முருகானந்தம் முன்னிலையில், லியாகத் அலியை போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது 10 நாள் காவலில் லியாகத்தை அனுமதிக்க போலீஸ் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.

ஆனால் தன்னை போலீஸ் காவலில் அனுமதித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே அனுமதிக்கக் கூடாது என்று லியாகத் அலி கோரினார். பின்னர் நீதிபதி முருகானந்தம், நான்கு நாள் காவலில் வைத்து லியாகத்தை விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி அளித்தனர்.

இதைத் தொடர்ந்து புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு லியாகத் அலி கொண்டு செல்லப்பட்டு விசாரணை தொடங்கியது.

இந்த நிலையில் லியாகத் அலிகான் சார்பில் ஜாமீன் கோரி அவரது சார்பில் வெங்கடேசன் என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக லியாகத் அலிகானை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி விட்டு போலீஸார் வெளியே அழைத்து வந்தபோது அவரை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்விகள் கேட்டனர். அவற்றுக்கு லியாகத் அலிகான் தெள்ளத் தெளிவாக, நிதானமாக பதிலளித்தார்.

நான் பாலக்கரையில் நிம்மதியாக இன்டர்நெட் சென்டர் நடத்தி வந்தேன். ஆனால் பாலக்கரை போலீஸார் கஞ்சா வைத்திருந்ததாகவும், ஆபாசப் படம் எடுத்ததாகவும் கூறி பொய் வழக்கு தொடர்ந்தனர்.

இப்போது நான் 100 பெண்களைக் கல்யாணம் செய்து மோசடி செய்ததாக வழக்கு தொடர்ந்துள்ளனர். நான் 100 பெண்களையெல்லாம் மணக்கவில்லை. இரண்டு பெண்களை மட்டுமே மணந்துள்ளேன்.

அதை ஒத்துக் கொள்கிறேன். எனது 2வது மனைவி சீமா. இவரைக் கல்யாணம் செய்த பிறகுதான் பாலக்கரை போலீஸார் என்னைக் கைது செய்தனர். சமீ தற்போது நாக்பூர் போய் விட்டார்.

நான் சென்னை போலீஸாரை, கத்தி, கடப்பாரையைக் காட்டி மிரட்டியதாக பொய்யாக கூறியுள்ளனர். என்னிடம் கத்தி, கடப்பாரை எப்படி வந்திருக்க முடியும். போலீஸார் என்னைப் பற்றி பொய்யான தகவல்களைக் கூறி வருகின்றனர்.

எனக்கு தோல் வியாதி உள்ளது. அதற்கு சிகிச்சை பெறவே சென்னை வந்தேன். எனக்கு எய்ட்ஸ் இருப்பதாக போலீஸார் பொய்யான தகவல்களை வெளியிட்டு என்னை அவமானப்படுத்தியுள்ளனர்.

நான் ஆபாசப் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. எனது லேப்டாப்பில் பதிவாகியுள்ள அனைத்தும் எனது தனிப்பட்ட விஷயமாகும். ஒவ்வொருவருக்கும், தங்களது தனிப்பட்ட விஷயங்களை இதுபோல பதிவு செய்து வைத்துக் கொள்ள உரிமை உள்ளது. அதுபோலத்தான நானும் செய்தேன்.

என் மீது வழக்கு போட்டுள்ள சங்கீதா, கார்த்திகா ஆகியோர் ஏற்கனவே கணவர்களைப் பிரிந்தவர்கள். விவாகரத்து கோரி மனு போட்டுள்ளனர். வெளிநாடு செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்க என்னிடம் வந்தனர். இதேபோல மேலும் பல பெண்களும் என்னை அணுகியுள்ளனர். ஆனால் அவர்களை எல்லாம் நான் மோசடி செய்து விட்டதாக போலீஸார் பொய் வழக்குப் போட்டுள்ளனர்.

போலீஸ் விசாரணைக்கு நான் போக அஞ்சுகிறேன். காரணம் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றார் லியாகத்.

இதற்கிடையே, புழல் சிறையில், 100க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய ஹால் போன்ற அறையில்தான் லியாகத்தும் அடைக்கப்பட்டிருக்கிறார். இவர்களில் பெரும்பாலானவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள். விரைவில் லியாகத் மீதும் குண்டர் சட்டத்தைப் பிரயோகிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X