ஷார்ஜா- கோவை இடையே நேரடி விமானம்
கோவை:
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை நகருக்கு, சர்வதேச குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் அரேபியா, ஷார்ஜாவிலிருந்து நேரடி விமான சேவையை மேற்கொள்ளவுள்ளது.
இதுகுறித்து கோவையில் ஏர் அரேபியா நிறுவன வர்த்தக இயக்குநர் கைல் ஹேவுட் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஷார்ஜாவிலிருந்து கோவைக்கு வாரம் இருமுறை விமான சேவை மேற்கொள்ளப்படும்.
திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த விமானம் இயக்கப்படும். நவம்பர் மாதம் முதல் சேவை தொடங்குகிறது. அதன் பின்னர் வாரம் 3 முறையாக இது அதிகரிக்கப்படும்.
ஏற்கனவே சென்னை, திருவனந்தபுரம், கொச்சி, ஜெய்ப்பூர், அமகதாபாத், மும்பை, நாக்பூர் ஆகிய நகரங்களுக்கு ஏர் அரேபியாவின் விமான சேவை உள்ளது என்றார் ஹேவுட்.
இந்த புதிய சர்வதேச சேவை மூலம், சர்வதேச விமான சேவையை பெறும் 3வது தமிழக நகரம் என்ற பெருமையை கோவை பெறுகிறது. தற்போது சென்னை, திருச்சி ஆகிய நகரங்களிலிருந்து சர்வதேச நகரங்களுக்கு விமான சேவை உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications